மின்னணு பண பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிமுறைகள்மின்னணு பண பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிமுறைகள் ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 68.23 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 68.23 ...
மத்திய அரசின் பட்ஜெட் பங்கு சந்தையை பாதிக்குமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2017
04:27

புதுடில்லி : மத்­திய நிதி­ய­மைச்­சர் அருண் ஜெட்லி, 2017 – 18ம் நிதி­யாண்­டிற்­கான, மத்­திய பட்­ஜெட்டை, பிப்., 1ல், பார்­லி­மென்­டில் தாக்கல் செய்ய உள்­ளார்.
வழக்­க­மாக, பட்­ஜெட் நாளன்று, அரசு அறி­விக்­கும் கொள்கை திட்­டங்­களின் அடிப்­ப­டை­யில், பங்­கு­கள் விலை­யில் அதிக ஏற்­றம் அல்­லது இறக்­கமோ இருக்­கும்; இது, பங்­குச்­சந்­தை­யின் எழுச்சி அல்­லது சரி­வுக்கு வழி­வ­குக்­கும். ‘வரும் நிதி­யாண்­டுக்­கான பட்­ஜெட்­டில், மத்­திய அர­சின் கொள்­கை­களில் பெரிய மாற்­றங்­கள் ஏதும் இருக்­காது என, எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தால், பங்­குச்­சந்­தை­களின் ஏற்ற, இறக்­கம் மித­மான அள­விற்கே இருக்­கும்’ என, ‘மார்­கன் ஸ்டான்லி’ நிறு­வ­னத்­தின் ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
அதன் விப­ரம்:கச்சா எண்­ணெய் விலை சரி­வ­டைந்து வந்த போது, பெட்­ரோ­லிய பொருட்­கள் மீதான கலால் வரியை, மத்­திய அரசு அவ்­வப்­போது உயர்த்தி வந்­தது. இத்­த­கைய கூடு­தல் வரு­வா­யில், அனை­வ­ருக்­கும் வங்­கிச் சேவை திட்­டத்தை, விரை­வாக மேற்­கொள்ள, மத்­திய அரசு திட்­ட­மிட்­டி­ருந்­தது. தற்­போது, கச்சா எண்­ணெய் விலை உயர்ந்து வரு­வ­தால், பெட்­ரோ­லிய பொருட்­க­ளுக்­கான கலால் வரியை, மத்­திய அரசு உயர்த்­தாது என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இவ்­வ­கை­யில், வரி வரு­வாய் குறை­யும்­பட்­சத்­தில், வங்­கிச் சேவை­களை பர­வ­லாக்­கும் திட்­டம், எதிர்­பார்த்­ததை விட, மந்­த­மாக வாய்ப்­புள்­ளது.
பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையை தொடர்ந்து, மின்­னணு பணப் பரி­வர்த்­தனை திட்­டங்­கள், விழிப்­பு­ணர்வு பிர­சா­ரங்­கள் ஆகி­ய­வற்­றுக்­கான செல­வி­னங்­க­ளை­யும், மத்­திய அரசு குறைக்க விரும்­பாது. இத்­த­கைய சூழ­லில், மிகப்­பெ­ரிய கொள்கை மாற்­றங்­களை, மத்­திய அரசு மேற்­கொள்­ளாது என்றே தோன்­று­கிறது. எனி­னும், பொதுத் துறை நிறு­வ­னங்­களின் பங்கு விற்­பனை உள்­ளிட்ட, இதர வகை வரு­வா­யின் அடிப்­ப­டை­யில், நிதிப்பற்­றாக்­குறை இலக்கு குறைக்­கப்­ப­ட­லாம்.
நடப்பு நிதி­யாண்­டில், மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில், நாட்­டின் நிதிப் பற்­றாக்­குறை இலக்கு, 3.5 சத­வீ­த­மாக நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருந்­தது; இது, வரும் நிதி­யாண்­டில், 3.3 சத­வீ­த­மாக குறைக்­கப்­படும் என, தெரி­கிறது. திரும்­பப் பெறப்­பட்ட செல்­லாத ரூபாய் நோட்­டு­க­ளுக்கு நிக­ராக, புதிய ரூபாய் நோட்­டு­கள் புழக்­கத்­தில் வரும் பட்­சத்­தில், மக்­களின் பயன்­பா­டும், அரசு திட்­டங்­க­ளுக்­கான ஒதுக்­கீ­டு­களும் அதி­க­ரிக்­கும். இதன் எதி­ரொ­லி­யாக, நாட்­டின் பொரு­ளா­தா­ரம், மந்த நிலை­யில் இருந்து வளர்ச்சி பாதைக்கு திரும்­பும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)