‘நோமுரா’ நிறுவனம் கணிப்பு:நாட்டின் பணப்புழக்க பிரச்னை மார்ச்சில் இயல்பு நிலைக்கு திரும்பும்‘நோமுரா’ நிறுவனம் கணிப்பு:நாட்டின் பணப்புழக்க பிரச்னை மார்ச்சில் இயல்பு ... ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.68.08 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.68.08 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
செல்­வத்­திற்­கான எளிய வழி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2017
04:41

முத­லீடு என்­பது, சிக்­க­லா­ன­தாக இருக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை என வலி­யு­றுத்தும், ஜே.எல்.காலின்ஸ், செல்வ வளம் பெறு­வ­தற்­கான எளிய வழி­களை, ‘தி சிம்பிள் பாத் டு வெல்த்’ புத்­த­கத்தில் விவ­ரித்­துள்ளார்.
இந்த புத்­த­கத்தின் அறி­முக பகு­தியில், செல்­வத்­திற்­கான அடிப்­படை அம்­சங்­களை, அவர் குறிப்­பி­டு­கிறார்:இந்த சிக்­க­லான உலகில் வாழ, நாம் உரு­வாக்­கிய மிகவும் சக்தி வாய்ந்த ஆயு­த­மாக, பணம் இருப்­பதால், அதை புரிந்து கொள்­வது முக்­கியம். பணத்­திற்கு எஜ­மா­ன­ராக இருக்க முடிந்தால், அது விசு­வா­ச­மான சேவ­க­னாக இருக்கும்; இல்­லை­யென்றால், அது நமக்கு எஜ­மா­ன­ராகி விடும்.‘ஆனால், பணம் முக்­கி­ய­மா­னது தான். எனினும், நான் அதையே நினைத்துக் கொண்­டி­ருக்க விரும்­ப­வில்லை’ என, என் மகள் ஒரு முறை கூறினாள். இது சரி­யா­னது தான். பணத்தைப் பற்றி நினைத்துக் கொண்­டி­ருப்­பதை விட, பாலங்கள் கட்­டு­வது, நோய்­களை குண­மாக்­கு­வது என, பல­ருக்கும் முக்­கி­ய­மான பணிகள் இருக்­கின்­றன.
ஆனால், பணம் தொடர்­பான விஷ­யங்­களை அலட்­சியம் செய்தால், நிதித் துறை, மந்­தி­ர­வா­தி­க­ளிடம் சிக்கி கொள்ள வேண்­டி­யி­ருக்கும். அவர்கள் முத­லீட்டை, சிக்­க­லா­ன­தாக மாற்றி விடுவர்.முத­லீடு என்­பது, சிக்­க­லா­ன­தாக இருக்க வேண்­டி­ய­தில்லை; அது அவ­சி­யமும் இல்லை; அதனால் பய­னு­மில்லை. வாழ்க்­கையில் சில அடிப்­ப­டை­யான விஷ­யங்­களை, நினைவில் கொள்ள வேண்டும்.நீங்கள் சம்­பா­திப்­பதை விட, குறை­வாக செலவு செய்­யுங்கள்; உப­ரி­ யா­னதை முத­லீடு செய்­யுங்கள்; கடன் பெறு­வதை தவிர்க்­கவும். இதை மட்டும் செய்து வந்தால், நீங்கள் எல்லா விதங்­க­ளிலும் வளம் பெறலாம். கடன் சுமையில் இருந்து விடு­ப­டு­வது, மிகவும் முக்­கியம்.
உங்கள் வரு­வாய்க்கு ஈடாக, வாழ்க்கை முறை இருந்தால், நீங்கள் ஒரு, நிதி அடிமை போல தான். நிதி நோக்கில் பொறுப்­பற்­ற­வர்­க­ளுடன் பழ­கு­வதை தவி­ருங்கள். பணத்தால் எதையும் வாங்க முடியும். ஆனால், நிதி சுதந்­தி­ரத்தை அல்ல என்­பதை உண­ரவும்.வாழ்க்கை தேர்­வுகள் என்­பது, எப்­போதும் பணத்தை அடிப்­ப­டை­யாக கொண்­ட­தல்ல என்­றாலும், எந்த முடிவை மேற்­கொண்­டாலும், அதன் நிதி தாக்கம் குறித்து கவ­னத்தில் கொள்­ளுங்கள்.நல்ல முத­லீடு என்­பது, சிக்­க­லா­னது அல்ல. நீங்கள் சம்­பா­திக்கும், ஒவ்­வொரு ரூபாய் மற்றும் உங்­களை நாடி வரும் ஒவ்­வொரு ரூபா­யிலும், ஒரு பகு­தியை சேமிக்­கவும். நீங்கள் எந்­த­ளவு அதி­க­மாக சேமித்து முத­லீடு செய்­கி­ன்றீரோ, அந்த அள­வுக்கு வளம் உரு­வாகும். உங்கள் வரு­வாயில், 50 சத­வீ­தத்­திற்கும் மேல் சேமித்து, முத­லீடு செய்ய முயற்சி செய்­யுங்கள். கடன் இல்­லாமல் இருந்தால், இது சாத்­தியம் தான்.
அதி­க­மாக சேமிப்­பதன் மூலம், வரு­வாய்க்குள் வாழ்க்கை நடத்த கற்றுக் கொள்­வ­துடன், முத­லீடு செய்­யவும் அதிகம் வாய்ப்பு இருக்கும். பங்­குச்­சந்தை முத­லீடு, அதிக பல­ன­ளிக்கும். ஆனால், சந்தை ஏற்ற, இறக்­கங்­களை கொண்­டது என, அறி­யவும்.உங்கள் முத­லீட்டின், 4 சத­வீத வரு­வாயில், உங்­களால் வாழ்க்கை நடத்த முடியும் என்றால், நீங்கள் நிதி சுதந்­திரம் பெற்று விட்­ட­தாக கொள்­ளலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)