‘நோமுரா’ நிறுவனம் கணிப்பு:நாட்டின் பணப்புழக்க பிரச்னை மார்ச்சில் இயல்பு நிலைக்கு திரும்பும்‘நோமுரா’ நிறுவனம் கணிப்பு:நாட்டின் பணப்புழக்க பிரச்னை மார்ச்சில் இயல்பு ... ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.68.08 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.68.08 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
முத­லீட்­டிற்கு தேவை­யான முக்­கிய பாது­காப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2017
04:43

எந்த முத­லீடும், நல்ல பலன் தரக்­கூ­டி­ய­தாக இருக்க வேண்டும் என்­ப­தோடு, பாது­காப்­பா­ன­தா­கவும் இருக்க வேண்டும். நிதி திட்­ட­மி­டலில் ஈடு­படும் போது, முத­லீட்­டிற்கு, தேக்க நிலைக்கு எதி­ரான பாது­காப்பு இருக்­கி­றதா என்றும் கவ­னிக்க வேண்டும். எதிர்­பா­ராமல் ஏற்­ப­டக்­கூ­டிய தேக்க நிலை, முத­லீட்டின் பலனை பாதிக்­கலாம் என்­பதால், இது மிகவும் அவ­சி­ய­மா­கி­றது.
மழைக் ­கா­லத்­திற்­காக முன்­கூட்­டியே சேமிப்­பது போல, தேக்க நிலை வரு­வ­தற்கு முன்பே, அதற்­கான பாது­காப்­பையும் பெற்­றி­ருக்க வேண்டும். பொரு­ளா­தார சுழற்­சியில் தேக்க நிலை என்­பது, எப்­போது வேண்­டு­மா­னாலும் ஏற்­ப­டலாம். தேக்க நிலையில் தாக்கம் முத­லீட்­டையும் பதம் பார்க்­கலாம். இதை தவிர்க்க முதல் வழி, அவ­சர கால நிதியை உரு­வாக்கி வைத்­தி­ருப்­பது என்­கின்­றனர் நிதி வல்­லு­னர்கள். அவ­சர கால நிதியின் முக்­கி­யத்­துவம், தனி­நபர் நிதியில் தொடர்ந்து வலி­யு­றுத்­தப்­படும் அம்­ச­மாக இருக்­கி­றது. 3 முதல் 6 மாத கால அடிப்­படை செல­வு­க­ளுக்­கான தொகையே, அவ­சர கால நிதி என குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.
இத்­த­கைய நிதி கைவசம் இருக்கும் போது, எதிர்­பா­ராத நெருக்­க­டி­க­ளிலும் செல­வு­களை சமா­ளிக்­கலாம் என்­ப­தோடு, தேக்க நிலையின் போதும், இது கைகொ­டுக்கும்; தேக்க நிலையின் போது, வரு­மானம் குறை­யலாம். கடன் கிடைப்­பதும் அரி­தா­கலாம். எனவே அவ­சர தேவை எனில், முத­லீட்டின் மீதே கைவைக்க வேண்­டி­யி­ருக்கும். இதனால், நீண்ட கால முத­லீ­டு­ களை பாதியில் விலக்கி கொள்ள நேரி­டலாம் என்­ப­தோடு, அவற்றை குறைந்த பல­னுக்கு விற்­கவும் நேரலாம். அவ­சர கால நிதி இருந்தால், நீண்ட கால முத­லீ­டுகள் பாதிக்­கப்­ப­டாமல் இருக்கும்.
கூடுதல் வரு­மானம்இதே போலவே வழக்­க­மான வரு­மா­னத்தை விட, கூடுதல் வரு­வாய்க்­கான வழியை உரு­வாக்கி கொள்ள வேண்டும். முழு நேர வேலை, திருப்­தி­யான வரு­மானம் அளிப்­ப­தாக இருந்­தாலும் கூட, உப­ரி­யாக, ஒரு வரு­மான வழியை உரு­வாக்கி கொள்­வது நல்­லது. இது பகுதி நேர பணி­யா­கவோ அல்­லது ஆலோ­சனை பணி போன்­ற­தா­கவோ இருக்­கலாம். உங்கள் ஆர்வம் சார்ந்த, வருவாய் வழி­யாக இருந்தால் இன்னும் நல்­லது. தேக்க நிலையின் போது, இந்த கூடுதல் வரு­மானம் பேரு­த­வி­யாக இருக்கும். முத­லீ­டுகள் பர­வ­லா­ன­தாக இருப்­பதும் மிகவும் அவ­சியம். ஒன்­றுக்கு ஒன்று தொடர்­பில்­லாத முத­லீட்டு சாத­னங்­களில் முத­லீடு செய்­தி­ருப்­பது நல்­லது.
பொரு­ளா­தார சூழலில், ஒரு முத­லீடு பாதிக்­கப்­பட்டால் கூட, இன்­னொரு முத­லீடு அதை சரி செய்து விடும். எனவே, பர­வ­லான முறையில் செய்­யப்­பட்ட முத­லீடு, தேக்க நிலையில் பாதிப்பை குறைக்கும்.வரு­மா­னத்­திற்கு மீறி செலவு செய்­யாமல் இருப்­பதை ஒரு பழக்­க­மாக வைத்­தி­ருக்க வேண்டும். இதன் மூலம் சேமிக்­கலாம் என்­ப­தோடு, தேக்க நிலை காலத்தில் செல­வுகள் கையை கடிக்­காமல் இருக்கும். கடன்கள் இருந்தால், அவற்றை அடைப்­பதில், முதலில் கவனம் செலுத்த வேண்டும்.மேலும் முத­லீடு செய்யும் போது, நீண்ட கால நோக்­கத்தை மனதில் கொண்டு செயல்­ப­டவும். இந்த அணு­கு­முறை, குறு­கிய கால தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய, தேக்க நிலை போன்­ற­வற்றில் இருந்து பாது­காப்­ப­தோடு, நிதி இலக்கை நோக்கி முன்­னே­றவும் உதவும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)