‘நோமுரா’ நிறுவனம் கணிப்பு:நாட்டின் பணப்புழக்க பிரச்னை மார்ச்சில் இயல்பு நிலைக்கு திரும்பும்‘நோமுரா’ நிறுவனம் கணிப்பு:நாட்டின் பணப்புழக்க பிரச்னை மார்ச்சில் இயல்பு ... ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.68.08 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.68.08 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சேமிப்பு கணக்கு மூலம் அதிக பலன் பெறு­வது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2017
04:45

வைப்பு நிதி­க­ளுக்­கான வட்டி விகிதம் குறைந்து வரும் சூழலில், அதிக வட்டி விகிதம் அளிக்கக் கூடிய, சேமிப்பு கணக்­கு­களை துவக்­கு­வது, பலன் அளிக்­குமா என்­பது பற்றி ஒரு பார்வை.

பொது­வாக, வங்கி சேமிப்பு கணக்­கு­க­ளுக்­கான வட்டி விகிதம் குறை­வா­னது என்­பதால், சேமிப்பு கணக்கில் பணத்தை வைத்­தி­ருப்­ப­தை­விட, அதிக பலன் தரக்­கூ­டிய, முத­லீட்டு வாய்ப்­பு­களை நாட வேண்டும் என்ற கருத்து, முன் வைக்­கப்­ப­டு­வ­துண்டு. ஆனால், தற்­போது, வங்கித் துறையில் ஏற்­பட்­டுள்ள போட்டி மற்றும் புது யுக வங்­கி ­களின் அறி­முகம் கார­ண­மாக, சேமிப்பு கணக்­கிற்­கான வட்டி விகிதம் கவ­னத்தை ஈர்க்கத் துவங்­கி­யுள்­ளன. குறைந்த வட்டி விகித சூழ­லிலும் கூட, ஒரு­ சில வங்­கி கள், சேமிப்பு கணக்­கிற்கு அதிக வட்டி வழங்­கு­கின்­றன.
புதி­தாக துவங்­கப்­பட்­டுள்ள பேமென்ட் வங்­கிகள், சிறிய வங்­கிகள் மற்றும் ஒரு­ சில தனியார் வங்­கிகள், சேமிப்பு கணக்­கிற்கு அதிக வட்டி அளிக்கும் சூழல் நில­வு­கி­றது. அதே நேரத்தில், வைப்பு நிதி­க­ளுக்­கான வட்டி விகிதம் குறைந்து வரு­கி­றது. ஒரு­ சில வைப்பு நிதி­களின் வட்டி விகிதம், சிறு சேமிப்பு வட்டி விகி­தங்­களை விடவும் குறை­வாக உள்­ளது. இந்­நி­லையில், அதிக வட்டி அளிக்கும் சேமிப்பு கணக்­குகள் கவ­னத்தை ஈர்க்­கின்­றன. பலரும், அதிக வட்டி தரும் சேமிப்­பு­களை துவக்­கு­வ­தற்­கான துாண்­டு­தலை பெரும் நிலையும் ஏற்­பட்­டுள்­ளது.
அதிக வட்டி விகிதம்அண்­மையில், உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி மற்றும் சூரியோதை ஸ்மால் பைனான்ஸ் வங்கி ஆகி­யவை, சிறிய வங்­கி­க­ளாக இயங்க துவங்­கி­யுள்­ள­தாக, ரிசர்வ் வங்கி அறி­வித்­துள்­ளது.டில்லி, பாட்னா, வார­ணாசி உள்­ளிட்ட நக­ரங்­களில், ஐந்து கிளை­க­ளுடன் செயல்­படத் துவங்­கி­யுள்ள, உத்கர்ஷ் வங்கி, மற்ற வங்­கி­களை விட, 1 முதல், 1.25 சத­வீதம் அதிக வட்டி அளிப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது. மும்­பையைச் சேர்ந்த, சூரியோதை வங்கி, சேமிப்பு கணக்­கிற்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை­யி­லான டிபா­சிட்­க­ளுக்கு, 6.25 சத­வீதம் வட்டி அளிப்­ப­தாக அறி­வித்­துள்­ளது. ஒரு லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை டிபா­சிட்­க­ளுக்கு, 7.25 சத­வீத வட்டி அளிக்­கி­றது.
பேமென்ட் வங்­கிகள் பிரிவில் செயல்­படத் துவங்­கி­யுள்ள, ஏர்டெல் பேமென்ட் வங்கி, சேமிப்பு கணக்­கிற்கு, 7.25 சத­வீத டிபாசிட் அளிப்­ப­தாக அறி­வித்­துள்­ளது. இந்த வகை வங்­கியில், ஒரு லட்சம் ரூபாய் வரையே டிபாசிட் செய்ய முடியும். ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி போன்ற வழக்­க­மான வங்­கிகள், சேமிப்பு கணக்­கிற்கு ஆண்­டுக்கு, 4 சத­வீத வட்டி அளித்து வரு­கின்­றன. இருப்­பினும், சில தனியார் வங்­கிகள் மற்றும் சிறிய வங்­கிகள், அதிக வட்டி அளிக்­கின்­றன. இண்­டஸ்இண்ட் வங்கி, யெஸ் பேங்க், கோடக் மஹிந்­திரா பாங்க், பந்தன் வங்கி, ஆர்.பி.எல்., வங்கி ஆகி­யவை, 4.25 சத­வீதம் முதல், 7.10 சத­வீதம் வரை வட்டி அளிக்­கின்­றன.
மாற்றம் தேவையா?ரிசர்வ் வங்கி, சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் தொடர்­பான கட்­டுப்­பா­டு­களை நீக்­கிய பின், போட்டி மிக்க சூழலில், சில வங்­கிகள் ஈர்க்­கக்­கூ­டிய வட்டி விகி­தங்­களை வழங்­கு­கின்­றன. பொது­வாக, கணக்கு போட்டுப் பார்த்தால், ஓராண்­டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை­யி­லான சேமிப்பு கணக்கு டிபா­சிட்­டிற்கு, 3.25 சத­வீத கூடுதல் வட்டி என்­பது, நாள்­தோறும், 1.98 ரூபாய் வட்டி வருவாய் அளிக்கும். 4 சத­வீத வட்டி எனில், இது, 1.09 ரூபா­யாக இருக்கும். எனினும், சேமிப்பு கணக்கை துவக்­கு­வ­தற்கு, அதிக வட்டி விகிதம் எனும் அம்­சத்தை மட்டும் பரி­சீ­லித்தால் போதாது என, நிதி வல்­லு­னர்கள் கூறு­கின்­றனர்.
கட்­ட­ணங்கள், சேவை, அணுகும் தன்மை உள்­ளிட்ட பல்­வேறு அம்­சங்­களை பரி­சீ­லிக்க வேண்டும் என்­கின்­றனர். அதே போல, மினிமம் பேலன்ஸ் தொகைக்­கான நிபந்­த­னை­யையும் கவ­னிக்க வேண்டும். உதா­ர­ண­மாக, ஏர்டெல் வங்­கியில் பணத்தை எடுக்க வேண்­டு­மெனில், சிறி­த­ளவு கட்­டணம் உண்டு. சூரியோதை வங்­கியில், மாதாந்­திர சரா­ச­ரி­யான, 2,000 ரூபாய் மினிமம் பேலன்ஸ் தொகையை வைத்­தி­ருக்க வேண்டும். இந்த தொகைக்கு குறை­வாக இருந்தால், அதற்­கேற்ப சிறிய அளவு அப­ராத கட்­ட­ணமும் விதிக்­கப்­ப­டலாம். எனவே, சேமிப்பு கணக்கின் அனைத்து அம்­சங்­க­ளையும் கவ­னத்தில் கொண்டு, பல விதங்­க­ளிலும் பலன் தரக்­கூ­டி­யதா என, சீர்­துாக்கிப் பார்த்து முடிவு செய்­வது ஏற்­ற­தாக அமையும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)