பதிவு செய்த நாள்
31 ஜன2017
04:38
டோக்கியோ : ஜப்பானைச் சேர்ந்த, டொயொட்டா நிறுவனம், கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், உலகளவில், 2016ல், 1.02 கோடி வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதே காலத்தில், ஜெர்மனியைச் சேர்ந்த, போக்ஸ்வேகன் நிறுவனம், 1.03 கோடி வாகனங்களை விற்பனை செய்து, முன்னணியில் உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், கார் விற்பனை குறித்த பட்டியலை, அடுத்த வாரம் வெளியிட உள்ளது. ஒருவேளை, இந்நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில், முதன்முறையாக, சர்வதேச கார் விற்பனையில், போக்ஸ்வேகன் நிறுவனம், முதலிடத்தை பிடிக்கும். கடந்த, 2015ல், டொயொட்டா, 1.01 கோடி வாகனங்களை விற்பனை செய்து முதலிடத்தில் இருந்தது. போக்ஸ்வேகன், இரண்டாவது இடத்திலும்; ஜெனரல் மோட்டார்ஸ், மூன்றாவது இடத்திலும் இருந்தன.
டொயொட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்டின் வின்டர்கார்ன் கூறுகையில், ‘‘எங்களுடைய இலக்கு, முதலிடம் பிடிப்பது அல்ல; வாடிக்கையாளர்களுக்கு, தரமான வாகனங்களை வழங்குவதே ஆகும்,’’ என்றார்.
போக்ஸ் வோகன் நிறுவனம், காற்று மாசு ஊழலில் சிக்கியுள்ள போதிலும், கார் விற்பனையில் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|