பதிவு செய்த நாள்
31 ஜன2017
17:14

புதுடில்லி: லோக்சபாவில், 2016 - 17 ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் நாட்டின் பொருளாதாரம் பற்றிய முழு விபரங்கள் உள்ளன. அதில் 2016 - 17ம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது 7.1 சதவீதமாக கணக்கிடப்பட்டிருந்தது. தொடர்ந்து படிப்படியாக 2017- 18 ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.75 - 7.5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு 2016- 17ல் தொழில்துறை வளர்ச்சி 5.2% ஆக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழிலாளர் மற்றும் வரிக்கொள்கையில் மாற்றம் செய்யப்பட வேண்டும். 2018 நிதியாண்டில் ஜிடிபி, சுங்கம் தொடர்பான வரிகள் 0.1 சதவீதம் குறைவாக இருக்கும், ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு பொருளாதாரம் சீரடைய கொள்கை அளவில் ஆதரவு அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|