பதிவு செய்த நாள்
01 பிப்2017
04:36
மும்பை : டெக் மகிந்திரா, அமெரிக்கா தவிர்த்த நாடுகளில், சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. இந்தியாவில், மென்பொருள் ஏற்றுமதியில், டெக் மகிந்திரா, ஐந்தாவது பெரிய நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனம், 2016 டிச., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 7,558 கோடி ரூபாயை, மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டை விட, 12.8 சதவீதம் அதிகமாகும்.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், மென்பொருள் துறையில், புதிய தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறது. இதனால், நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அமெரிக்கா தவிர்த்த வெளிநாடுகளில், எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி, 14 சதவீதம் உயர்ந்துள்ளது. டெக் மகிந்திரா, கடந்த காலாண்டில், 12 புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|