பதிவு செய்த நாள்
01 பிப்2017
12:00

புதுடில்லி : எதிர்கட்சிகளின் அமளிக்கு இடையே மத்திய பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை பார்லிமென்ட்டில் தாக்கல் செய்தார். அதன் விபரம் வருமாறு...
நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், கறுப்பு பணத்தை ஒழிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்காவின் நிதிக்கொள்கையால் உலக பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. கறுப்பு பணம், ஊழலற்ற இந்தியாவை உருவாக்க 10 சிறப்பு அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு அதிகம் செலவழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நேர்மையானவர்களை கவுரவிக்கும் வகையில் வரி முறையில் சீர்த்திருத்தம் செய்யப்படும்.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிப்பதுடன் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. நாட்டின் வளர்ச்சி மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கையால் பணவீக்கம் இரட்டை இலக்கில் இருந்து குறைக்கப்பட்டு, பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. உலகளவில் இந்தியாவின் வளர்ச்சி பிரகாசமாக உள்ளது. உற்பத்தியில் 6வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை 0.3 சதவீதம் குறைந்துள்ளது. அந்நிய முதலீடு அதிகரித்திருக்கிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|