பதிவு செய்த நாள்
01 பிப்2017
12:06

புதுடில்லி : மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பார்லிமென்ட்டில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், நாட்டில் அந்நிய முதலீடு 36 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்றார். ஜனவரி மாதம் முடிய அந்நிய முதலீடு கையிருப்பு 361 பில்லியன் டாலராக உள்ளது என்றும், அடுத்த 12 மாதங்களுக்கு தேவையான அந்நிய செலாவணி தேவை கையில் இருப்பபதாகவும் ஜெட்லி தெரிவித்தார்.
சுத்தமான இந்தியாவை உருவாக்குவது முக்கிய அம்சம். அடுத்த 5 ஆண்டில் மாத வருமான இரண்டு மடங்காக உயரும். நடப்பாண்டில் விவசாயத்துறை 4.1 சதவீதம் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு வாபஸால் பொருளாதாரம் தற்காலிகமாக சுணக்கத்துடன் இருந்தாலும் எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருக்கும். 2018-க்குள் அனைத்து கிராமப்புறங்களிலும் மின்சார வசதி ஏற்படுத்தப்படும், தொழிலாளர் சட்டம் எளிமையாக்கப்படும் என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|