பதிவு செய்த நாள்
03 பிப்2017
23:54

மும்பை : நகை வியாபாரிகளின் கடையடைப்பு போராட்டம், ‘பான் கார்டு’ விதிமுறை, பண மதிப்பு நீக்க நடவடிக்கை போன்றவற்றால், கடந்த ஆண்டு, தங்கம் மற்றும் நகைகளுக்கான தேவை குறைந்து உள்ளது.
இது குறித்து, உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில், 2016ல், தங்கத்திற்கான தேவை, 21 சதவீதம் குறைந்து, 675.50 டன்னாக சரிவடைந்து உள்ளது. இது, முந்தைய ஆண்டில், 857.20 டன்னாக இருந்தது.இதே காலத்தில், தங்க நகைகளுக்கான தேவை, 22.4 சதவீதம் குறைந்து, 662.30 டன்னில் இருந்து, 514 டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது; இது, மதிப்பின் அடிப்படையில், 12.3 சதவீதம் சரிவடைந்து, 1,58,310 கோடி ரூபாயில் இருந்து, 1,38,838 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
‘பான் கார்டு’கடந்த ஆண்டு, அக்., – டிச., வரையிலான நான்காவது காலாண்டில், தங்கம் விலை குறைந்து இருந்தது. இத்துடன், தீபாவளி பண்டிகை, திருமண காலம் ஆகியவை காரணமாக, தங்கத்திற்கான தேவை, 3 சதவீதம் அதிகரித்து, 244 டன்னாக உயர்ந்தது. இருந்த போதிலும், முழு ஆண்டில், தங்கம் மற்றும் தங்க நகைகளுக்கான தேவை சரிவடைந்து உள்ளது.இதற்கு, தங்க நகைகளுக்கு விதிக்கப்பட்ட உற்பத்தி வரி, அதை தொடர்ந்து, தங்க நகை வியாபாரிகள் நடத்திய கடையடைப்பு போராட்டம், 2 லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்க, ‘பான் கார்டு’ கட்டாயமாக்கப்பட்டது போன்றவை தான் காரணம்.அத்துடன், பண மதிப்பு நீக்க நடவடிக்கை, வருவாய் அறிவிப்பு திட்டங்கள் ஆகியவையும், தங்கத்திற்கான தேவையை குறைக்க உதவியுள்ளன.
வெளிப்படைஇத்தகைய நடவடிக்கைகளால், தங்கத்திற்கான தேவை குறைந்த போதிலும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள், தங்க நகை துறையில், வெளிப்படையான செயல்பாடுகளுக்கு வழிவகுத்துள்ளன.இதனால், தங்க வியாபாரிகள், நகை வாங்குவோர் என, இருதரப்பினரும் பயன் அடைவர். தங்கம் மற்றும் ஆபரணங்கள் துறை, மேலும் அமைப்பு சார்ந்ததாக மாறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
உலகளவில், தங்கம் பயன்பாட்டில், இந்தியாவும், சீனாவும் முன்னணியில் உள்ளன. எனினும், இந்த இரு நாடுகளிலும், தங்க நகை விற்பனை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு, இந்தியா, சீனாவின் தங்க நகை விற்பனை, முறையே, 21 சதவீதம் மற்றும் 7 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவில், விரைவில் அறிமுகமாகும், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, பல முனை வரிகளுக்கு முடிவு கட்டும். அதனால், இந்தாண்டு தங்கத்திற்கான தேவை, 650 – 750 டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சோமசுந்தரம், நிர்வாக இயக்குனர், உலக தங்க கவுன்சில்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|