பதிவு செய்த நாள்
08 பிப்2017
08:11

புதுடில்லி : மத்திய அரசின், பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின், பால்வளத் துறை, ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனையில், சிறப்பாக முன்னேற்றம் அடைந்து வருவதாக, வேளாண் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து, அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின், ஜன., 18 வரை, 828.39 கோடி ரூபாய், பால் உற்பத்தியாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு, நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளது. இதற்கு முன், 51.28 கோடி ரூபாய் என்ற அளவுக்கே செலுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க, பால் உற்பத்தியாளர்களின் வங்கிக் கணக்குகள் எண்ணிக்கை, 15.59 லட்சத்தில் இருந்து, 56.43 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
மேலும், வங்கிக் கணக்கு இல்லாத, பால் உற்பத்தியாளர்களுக்கு, வங்கிக் கணக்கு துவக்கி, டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம், அவர்கள் பல வழிகளில் பயனடைய முடியும்.நாள் ஒன்றுக்கு, 8.50 கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், 4.25 கோடி லி., தனியார் துறை மூலமும்; 4.25 கோடி லி., கொள்முதல், கூட்டுறவுத் துறை வாயிலாகவும் நடைபெறுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|