பதிவு செய்த நாள்
08 பிப்2017
08:11

புதுடில்லி : என்.எஸ்.இ., என, சுருக்கமாக அழைக்கப்படும், தேசிய பங்குச் சந்தை, புதிய பங்கு வெளியீட்டில் இறங்கி, 10 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இது, சமீப காலத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய பங்கு வெளியீடாக இருக்கும்.
இந்த பங்கு வெளியீடு தொடர்பான அனைத்து ஆவணங்களும், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, ‘செபி’யிடம் வழங்கப்பட்டு உள்ளன.இந்த ஆவணங்களை பரிசீலித்த செபி அதிகாரிகள், ஒருசில அம்சங்களை தெளிவுபடுத்தி, கூடுதல் விபரங்களை அளிக்க கோரியுள்ளனர்.இதையடுத்து, இப்பங்கு வெளியீட்டை நிர்வகிக்கும், சிட்டி குரூப், மார்கன் ஸ்டான்லி உள்ளிட்ட வணிக வங்கிகள், செபிக்கு உரிய விளக்கம் அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விளக்கத்தை பெற்று, ஒரு மாதத்திற்குள், பங்கு வெளியீட்டிற்கு, செபி, முறைப்படி அனுமதி வழங்கும் என, தெரிகிறது.ஏல முறையில் நடைபெற உள்ள பங்கு வெளியீட்டில், என்.எஸ்.இ., 20 – 25 சதவீத பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|