பதிவு செய்த நாள்
09 பிப்2017
00:52

புதுடில்லி : முதன்முறையாக கடன் வாங்குபவர்களுக்கு, எளிதில் கடன் கிடைப்பதற்கு வசதியாக, ஐ.டி.எப்.சி., வங்கி, இண்டியாலெண்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
முதன் முறையாக கடன் வாங்குபவர்களுக்கு, கடன் கிடைப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, இதற்கு முன், அவர்கள் கடன் வாங்கியது கிடையாது என்பதால், அவர்கள் கடனை திருப்பி செலுத்துவதில் எவ்வாறு நடந்து கொள்வர் என்பதை வங்கிகள் அறியும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதனால், அவர்களுக்கு கடன் வழங்க நிறுவனங்கள் தயக்கம் காட்டக்கூடும்.இந்நிலையில், இத்தகையவர்களுக்கு எளிதில் கடன் வழங்க வசதியாக, தனியார் துறையைச் சேர்ந்த, ஐ.டி.எப்.சி., வங்கி, நிதி சார்ந்த தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான, இண்டியாலெண்ட்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
இது குறித்து, ஐ.டி.எப்.சி., வங்கி தெரிவித்துள்ளதாவது: இதற்கு முன் கடன் வாங்கியிராத மாதாந்திர சம்பளம் வாங்கும் நபர்களுக்கு, உடனடி கடன் வசதி இனி எளிதில் கிடைக்கும். இதற்காக, தனித்துவம் வாய்ந்த சேவையை இண்டியாலெண்ட்ஸ் எங்களுக்கு வழங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய, இண்டியாலெண்ட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர், கவுரவ் சோப்ரா, ‘‘புதிய தலைமுறை நிதி நிறுவனங்களும், வங்கி சாரா நிதி நிறுவனங்களும் அதிக பாதுகாப்பற்ற கடன் சந்தையையும் பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர். அப்படிப்பட்ட சந்தையை விரிவாக்கும் வகையில், நாங்கள், ஐ.டி.எப்.சி., வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்,” என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|