பதிவு செய்த நாள்
09 பிப்2017
00:54

புதுடில்லி : மின் வினியோக நிறுவனமான, டாடா பவர் டி.டி.எல்., நிறுவனம், அதிக எரிசக்தி திறன் கொண்ட, எல்.இ.டி., பல்புகள் மற்றும் மின் விசிறிகளை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக இந்நிறுவனம், எனர்ஜி எபிசியன்சி சர்வீசஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. மேலும், இத்தயாரிப்புகள், மத்திய அரசின் உஜாலா நிதி திட்டத்தின் கீழ் நுகர்வோர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
டில்லியின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதி மக்களுக்காக இந்த, எல்.இ.டி., பல்புகளும் மின் விசிறிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை சலுகை விலையில் நுகர்வோர்களுக்கு வழங்கப்படும். 9 வாட் திறன் கொண்ட, எல்.இ.டி., பல்பு ஒன்றின் விலை, 230 ரூபாயாகவும், மின் விசிறியின் விலை 1,150 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து, டாடா பவர், டி.டி.எல்., நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மத்திய அரசின், உஜாலா நிதி திட்டத்தை பரவலாக்கவும், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி, சூழலை பாதுகாக்கவும், நுகர்வோர்களுக்கு குறைவான விலையில், அதிக பலன் கிடைக்கவும் உதவியாக இருக்கும் வகையில், இத்திட்டத்தில் இணைந்துள்ளது, டாடா பவர் டி.டி.எல்., இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|