பதிவு செய்த நாள்
09 பிப்2017
00:56

புதுடில்லி : மத்திய அரசு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் முன்னேற்றத்திற்கு, விரைவில், ஒருங்கிணைந்த தேசிய கொள்கையை அறிவிக்க உள்ளது.
இது குறித்து, மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறியதாவது: குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு என, இதுவரை தனி கொள்கை எதுவும் இல்லை. எனவே, கொள்கையை வகுக்க, மத்திய அமைச்சரவை முன்னாள் செயலர் பிரபாத் குமார் தலைமையில், ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, தேசிய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் கொள்கை குறித்த அறிக்கையை வழங்கியுள்ளது. இது, அனைத்து அமைச்சகங்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, விரையில், பொதுமக்களின் கருத்து கேட்புக்காக வலைதளத்தில் வெளியிடப்படும்.
கடந்த, 2015, செப்.,ல் அறிமுகமான, 'உத்யோக் ஆதார்' திட்டத்தில், 25 லட்சம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. மத்திய பட்ஜெட்டில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 6,482 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டு ஒதுக்கப்பட்டதை விட, 87 சதவீதம் அதிகம். அதுபோல, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான, கடன் உறுதி நிதியத்திற்கான ஒதுக்கீடு, 2,500 கோடி ரூபாயில் இருந்து, 7,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியம் மூலம், 27 லட்சம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, வங்கிகள் மூலம், 1,23,000 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில், 50 கோடி ரூபாய் விற்றுமுதல் ஈட்டும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான வருமான வரி, 30 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|