பதிவு செய்த நாள்
09 பிப்2017
00:59

பெங்களூரு : ‘‘அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விடுத்துள்ள, புதிய சவால்களை சமாளிக்கும் ஆற்றல், இந்திய தொழில் அதிபர்களிடமும், தொழில் முனைவோரிடமும் உள்ளது,’’ என, டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா தெரிவித்து உள்ளார்.
பெங்களூரில், ‘கே – ஸ்டார்ட்’ நிறுவன விழாவில், அவர் மேலும் பேசியதாவது: சில மாதங்களாக, நானும், ‘ஸ்டார்ட் அப்’ துறையும், பல்வேறு சவால்களை சந்திக்க நேர்ந்துள்ளது. அத்துடன், அமெரிக்க அதிபர் டிரம்பும், உள்நாட்டு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், புதிய சவால்களை விடுத்துள்ளார். நம்மை நாமே புதுப்பித்துக் கொள்வதன் மூலம், இந்த சவால்களை வெற்றிகரமாக சமாளிக்க முடியும் என்பதை, உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
போட்டிடிரம்பின், பாதுகாப்பு வாதமும், மூலதன முடக்க கொள்கைகளும் முற்றிலும் தவறு என, கூற முடியாது. சில சமயம், மூலதன முடக்க நடவடிக்கைகள் பலனளிக்கும்; சில சமயம், போட்டியில்லா நிலையை ஏற்படுத்தி விடும். ஆகவே, அக்கொள்கைகளை நியாயப்படுத்தவோ அல்லது ஒதுக்கித் தள்ளவோ முடியாது. ஒரு சில நிறுவனங்கள், நியாயமற்ற போட்டியில் ஈடுபடுவதால், புதிய, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், தலையெடுக்க முடியாமல் அழிந்து விடுகின்றன. ஆகவே, அத்தகைய நிறுவனங்களின் முறையற்ற செயல்பாடுகளை, ஒழுங்குமுறை அமைப்புகள் கட்டுப்படுத்த வேண்டும். தொழிலில், சமச்சீரான போட்டிக்கு வழிவகை செய்ய வேண்டும்.
துணிச்சல்பெரும்பான்மையான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், பணப் பிரச்னைகளை சந்திக்கின்றன. அந்நிறுவனங்களின் செயல்பாடுகளை பொறுத்தே, கூடுதல் முதலீடுகள் குவியும் அல்லது வெளியேறும். இவை எல்லாவற்றையும் விட, ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு அதிர்ஷ்டம், உள்ளுணர்வின் வழி நடப்பது, தனிப்பட்ட முறையில் எடுக்கப்படும் தீர்க்கமான முடிவு ஆகியவையே முக்கியம் என, நான் கருதுகிறேன்.பிரச்னையை கண்டு ஓடி, ஒளியாமல், துணிச்சலாக எதிர்கொண்டு, சரியான முறையில் கையாண்டால், தலை நிமிர்ந்து நடக்கலாம்.
புகழ் பெற்ற தலைமை செயல் அதிகாரிகளுக்கு நான் சொல்வதெல்லாம், ‘பதவி வரும்போது பணிவு வரவேண்டும்; வெற்றிச் செருக்கு தலைக்கு ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்பது தான். தனக்கு தான் எல்லாம் தெரியும் என, நினைத்து செயல்படுவது, நிறுவனத்தின் அழிவுக்கு வழி வகுத்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.
டாடா குழுமத்தின் தற்காலிக தலைவர் பதவியில் இருந்து, வரும், 23ம் தேதி விலக உள்ள ரத்தன் டாடா, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களில், கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|