பதிவு செய்த நாள்
12 பிப்2017
16:13

கோவை, 'ஸ்வைப்பிங்' வசதியுடன் கூடிய ஏ.டி.எம்., கார்டுகளை, தபால்துறை விரைவில் அறிமுகப்படுத்துகிறது.வங்கி சேவையில் களமிறங்கியுள்ள தபால் துறை, ஏ.டி.எம்., மையங்களை நாடு முழுவதும் துவக்கியுள்ளது. தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள், தலைமை தபால் நிலையங்களில், டெபிட் கார்டுகளை பெறலாம்.
இதுவரை, வாடிக்கையாளர்கள் மட்டுமே, தபால் ஏ.டி.எம்.,களில் பணம் எடுத்து வந்த நிலையில், தனியார் வங்கி டெபிட் கார்டுகள் மூலமாகவும், தபால் ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பிற வங்கி ஏ.டி.எம்.,களிலும், தபால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியும்.இதுபோன்ற வசதிகளால், தபால் ஏ.டி.எம்., கார்டு பயன்படுத்த பலர் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கிடையில், 'ஷாப்பிங்' செய்ய ஏதுவாக, 'ஸ்வைப்பிங்' வசதியுடன் கூடிய கார்டுகளை வினியோகிக்க, தபால் துறை திட்டமிட்டுள்ளது.
கோவை தலைமை தபால் நிலைய அதிகாரி சுப்ரமணியம் கூறுகையில், ''தற்போது, 'ஸ்வைப்பிங்' வசதியுடன் கூடிய டெபிட் கார்டுகளை அறிமுகப்படுத்தும் முயற்சியில், தபால்துறை ஈடுபட்டு வருகிறது. ஓரிரு மாதங்களில், புதிய வசதியுடன் கூடிய ஷாப்பிங் கார்டுகள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|