'ஸ்வைப்பிங்' வசதியுடன் ஏ.டி.எம்., கார்டு தபால் துறை விரைவில் அறிமுகம்'ஸ்வைப்பிங்' வசதியுடன் ஏ.டி.எம்., கார்டு தபால் துறை விரைவில் அறிமுகம் ... பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பாஸ்­வேர்டு பாது­காப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2017
05:12

நெட் பேங்கிங் எனப்­படும் இணையம் மூலம் வங்­கிச்­சே­வையை பெறும் வசதி, இருந்த இடத்தில் இருந்தே வங்­கிச்­சே­வை­களை அணுக வழி செய்­கி­றது. பில் செலுத்­து­வதில் துவங்கி, பண பரி­மாற்றம், கணக்கு விப­ரங்­களை அறிதல் என பல­வ­கை­யான சேவை­களை பெற இதை பயன்­ப­டுத்­தலாம். இணையம் மூலம் வங்­கிச்­சே­வையை பெறும் போது பாது­காப்­பிலும் கவனம் செலுத்த வேண்டும். நாம் பயன்­ப­டுத்தும் பாஸ்­வேர்டு வலு­வா­ன­தா­கவும், பாது­காப்­பா­ன­தா­கவும் இருக்க வேண்டும். இதற்­கான குறிப்­புகள்:
வலு­வா­னதா? வலு­வான பாஸ்­வேர்டு குறைந்த பட்சம், எட்டு வெவ்­வேறு வித­மான எழுத்து வடி­வங்­களை பெற்­றி­ருக்க வேண்டும் என்று சொல்­லப்­ப­டு­கி­றது. ஏனெனில் தொடர்ச்­சி­யாக ஒரே வித­மான எழுத்­துக்கள் இருந்தால் அவற்றை ஹேக்­கர்­களால் எளி­தாக கணித்து விட முடியும். இதை தவிர்க்க, நிறுத்தல் குறி, சத­வீத குறி, புள்ளி, டாலர் குறி, ஹாஷ் உள்­ளிட்­ட­வற்றை பயன்­ப­டுத்­தலாம். அதே போல எழுத்­துக்­களை பெரிய எழுத்­துக்கள், சிறிய எழுத்­துக்கள், நிறுத்தல் குறிகள் கொண்­ட­தா­கவும் பயன்­ப­டுத்த வேண்டும்.
நீளம் கூடாதுபாஸ்­வேர்டில் பயன்­ப­டுத்­தப்­படும் எழுத்து வடிவம் தொடர்ச்­சி­யாக, மூன்று எழுத்­துக்­க­ளுக்கு மேல் இல்­லாமல் இருப்­பதும், எண்கள் தொடர்ச்­சி­யாக இரண்டு இலக்­கங்­க­ளுக்கு மேல் இல்­லாமல் இருப்­பதும் நல்­லது. இடையே வேறு வடி­வங்­களை பயன்­ப­டுத்த வேண்டும். அதே போல டெலிட் போன்ற வார்த்­தை­க­ளையும் பாஸ்­வேர்டில் பயன்­ப­டுத்­து­வதை தவிர்க்க வேண்டும். இவை சிக்­கலை உண்­டாக்க கூடி­ய­வை­யாக கரு­தப்­ப­டு­கின்­றன.
தனித்­தனிவலு­வான பாஸ்­வேர்டை உரு­வாக்­கினால் மட்டும் போதாது, அவற்றை நிர்­வ­கிப்­ப­திலும் சரி­யான அணு­கு­மு­றையை கடை­பி­டிக்க வேண்டும். பொது­வா­கவே ஒரே பாஸ்­வேர்டை ஒன்­றுக்கு மேல்­பட்ட சேவை­க­ளுக்கு பயன்­ப­டுத்­தக்­கூ­டாது என சொல்­லப்­ப­டு­கி­றது. எனவே, ஒன்­றுக்கு மேற்­பட்ட வங்­கி­களில் இணைய வங்­கிச்­சே­வையை பயன்­ப­டுத்­தினால், அவை ஒவ்­வொன்­றுக்கும் தனித்­தனி பாஸ்­வேர்டு வைத்­தி­ருக்க வேண்டும். அதே போல கம்ப்­யூட்­டரில் நுழைய பயன்­ப­டுத்தும் பாஸ்­வேர்டில் இருந்து இணைய வங்­கிச்­சே­வைக்­கான பாஸ்­வேர்டு வேறு­பட்­ட­தாக இருக்க வேண்டும்.
செய்­யக்­கூ­டா­தவையாரி­டமும் பாஸ்­வேர்டை பகி­ரவோ, அவற்றை குறித்து வைக்­கவோ வேண்டாம்.கம்ப்­யூட்­டரில் எந்த கோப்பு வடி­விலும் பாஸ்­வேர்டை சேமித்து வைக்க கூடாது. ஒரே பாஸ்­வேர்டை மாற்­றாமல்தொடர்ச்­சி­யாக பயன்­ப­டுத்­து­வதுநல்­லது அல்ல.பாஸ்­வேர்டை நினைவில் கொள்­ளவும் எனும் வச­தியை ஒரு போதும் கிளிக் செய்ய வேண்டாம்.
தவிர்க்க வேண்­டி­யவைஉங்கள் பாஸ்­வேர்டு ஆங்­கில மற்றும் தொழில்­நுட்ப அக­ரா­தி­களில் இடம் பெற்­றி­ருக்க கூடி­ய­தாக இருக்க கூடாது.ஒரு­வரின் பெயர், பொருட்கள் அல்­லது இடங்­களில் பெயர்­களை குறிப்­ப­தாக இருக்க கூடாது. பிறந்த தினங்கள், தொலை­பேசி எண்கள், வாகன எண்­களை தவிர்க்­கவும். விசைப்­ப­லை­கையில் பார்க்க கூடிய எழுத்­துக்­களின் வழக்­க­மான சேர்க்­கை­யையும் தவிர்க்க வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)