'ஸ்வைப்பிங்' வசதியுடன் ஏ.டி.எம்., கார்டு தபால் துறை விரைவில் அறிமுகம்'ஸ்வைப்பிங்' வசதியுடன் ஏ.டி.எம்., கார்டு தபால் துறை விரைவில் அறிமுகம் ... பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
காப்­பீட்டில் நுகர்வோர் நலன் காக்க வரைவு நெறி­மு­றைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2017
05:12

பாலி­சி­தா­ரர்­களின் நலன் காக்கும் வகையில், புதிய வரைவு நெறி­மு­றை­களை,இந்­திய காப்­பீடு ஒழுங்­கு­முறை மற்றும் மேம்­பாட்டு ஆணையம் வெளி­யிட்டு கருத்­துக்­களை கோரி­யுள்­ளது.
இம்­மாத துவக்­கத்தில், பொது பட்ஜெட் தாக்கல் செய்­யப்­பட்ட தினத்­தன்று, இந்­திய காப்­பீடு ஒழுங்­கு­முறை மற்றும் மேம்­பாட்டு ஆணை­ய­மான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., பாலி­சி­தா­ரர்­களின் நலன் காப்­ப­தற்­கான வரைவு நெறி­மு­றை­களை வெளி­யிட்­டது. ஏற்­க­னவே உள்ள, 2002 விதி­மு­றை­களுக்கு பதி­லாக உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள இந்த வரைவு நெறி­மு­றைகள், பாலி­சி­தா­ரர்கள் நலன்கள் பாது­காக்­கப்­ப­டு­வது, அவர்கள் நியா­ய­மான சேவை பெறு­வது, பாலிசி விற்­ப­னையின் போது, தேவை­யான தக­வல்­களை பெறு­வது ஆகிய அம்­சங்­களை கொண்­டி­ருக்­கி­றது.இப்­போது நடை­மு­றையில் உள்ள, விதி­களின் மேம்­பட்ட வடி­வ­மாக இந்த வரைவு நெறி­மு­றைகள் அமைந்­தி­ருப்­ப­தாக கரு­தப்­ப­டு­கி­றது. குறிப்­பாக, கிளைம்­களை பொறுத்­த­வரை வர­வேற்­கத்­தக்க அம்­சங்­களை கொண்­டி­ருப்­ப­தாக கரு­தப்­ப­டு­கி­றது.
15 நாள் அவ­காசம்ஆயுள் காப்­பீட்டைப் பொறுத்­த­வரை, தற்­போது அமலில் உள்ள விதி­மு­றை­களின் படி, கிளைம் கோரிக்கை சமர்­பிக்­கப்­பட்ட, 15 நாட்­க­ளுக்குள் நிறு­வனம் ஆவ­ணங்கள் கோரு­வது, சந்­தே­கங்­களை நிவர்த்தி செய்து கொள்­வது போன்­ற­வற்றை, ஒரே கட்­டத்தில் முடித்­துக்­கொள்ள வேண்டும். இதில், வரைவு நெறி­மு­றையில் எந்த மாற்­றமும் இல்லை. ஆனால், கிளைம்­களை பைசல் செய்­வ­தற்­கான காலம், 30 நாட்­களில் இருந்து, 15 நாட்­க­ளாக குறைக்­கப்­பட்­டுள்­ளது. அனைத்து ஆவ­ணங்கள் மற்றும் கேட்­கப்­பட்ட தக­வல்கள் கிடைத்த, 15 நாட்­க­ளுக்குள் ஆயுள் காப்­பீடு பாலிசி தொடர்­பான கிளைம் தொகை வழங்­கப்­பட வேண்டும் அல்­லது உரிய கார­ணங்­களை விளக்கி, நிரா­க­ரிக்­கப்­பட வேண்டும்.
காப்­பீடு நிறு­வனம், ஒரு கிளைம் குறித்து மேற்­கொண்டு விசா­ரிக்க விரும்­பினால், தற்­போது, ஆறு மாத காலம் எடுத்துக் கொள்­ளலாம். ஆவ­ணங்கள் கிடைக்­க­வில்லை என்­பது போன்ற கார­ணங்­களைக் கூறி, மேலும் நீட்­டிக்­கலாம். ஆனால், புதிய நெறி­மு­றை­களின் படி, ஆவ­ணங்கள் கிடைத்த, 90 நாட்­க­ளுக்குள் இதை முடித்­துக்­கொள்ள வேண்டும் என, தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேலும், இந்த கிளைம்­களை அவை சமர்ப்­பிக்­கப்­பட்ட, 270 நாட்­க­ளுக்குள் பைசல் செய்ய வேண்டும். அதே போல, கிளைம் தொகை வழங்­கப்­பட வேண்­டிய நிலையில், எந்த கார­ணத்­தி­னாலோ தொகை வழங்­கப்­ப­டாத நிலை இருந்தால், நிறு­வனம் வங்கி வட்­டியை விட, 2 சத­வீதம் கூடு­த­லாக வட்டி வழங்க வேண்டும் என, குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மருத்­துவக் காப்­பீட்டை பொருத்­த­வரை, செட்­டில்மென்ட் அதற்­கான விதி­க­ளுக்கு ஏற்ப அமையும். வீடு மற்றும் வாகனக் காப்­பீடு தொடர்­பான அம்­சங்­களும் இடம்­பெற்­றுள்­ளன.
தகவல் விளக்கம்காப்­பீடு நிறு­வ­னங்கள், தங்கள் இயக்­குனர் குழு ஏற்­றுக்­கொண்ட சேவை கார­ணி­களை, இணை­ய­த­ளத்தில் வெளி­யிட வேண்டும் என்றும் இந்த வரைவு தெரி­விக்­கி­றது. பாலிசி குறித்து விளக்­கப்­படும் போது மற்றும் விற்­பனை செய்­யப்­படும் போது, அதன் பலன்கள் தவ­றாக குறிப்­பி­டப்­படாத வகையில், பாலி­சியின் பலன்கள் அல்­லது திரும்பி அளிக்கும் உரிமை ஆகிய தக­வல்கள், தெளி­வாக குறிப்­பி­டப்­பட வேண்டும் என்­ப­தையும், இது உள்­ள­டக்­கிஇ­ருக்­கி­றது. புகார்­க­ளுக்கு நிவா­ரணம் அளிப்­ப­தற்­கான வழி­மு­றை­களும் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்க வேண்டும்.
இவை, நுகர்வோர் நலன் காக்கும் வகையில் அமைந்­தி­ருந்­தாலும் போது­மா­ன­தல்ல என, இத்­துறை வல்­லு­னர்கள் தெரி­விக்­கின்­றனர். பாலிசி தொடர்­பான தக­வல்­களை வெளி­யிட வேண்டும் என்­பதை கடந்து, பாலிசி குறித்த அனைத்து சிக்­க­லான தக­வல்­களும் கட்­டுப்­பாட்­டாளர் அளவில் விவ­ரிக்­கப்­பட்டு, ஏற்­கப்­ப­டு­வ­தோடு, அதன் பலன்கள் மற்றும் நிபந்­த­னைகள் எளி­தாக புரியும் வகையில் விளக்­கப்­பட வேண்டும். பாலி­சியின் முக்­கிய அம்­சங்கள், எளி­தாக புரியும் வாச­கங்­களில், பிர­தா­ன­மாக கொட்டை எழுத்­துக்­களில் அச்­ச­டிக்­கப்­பட வேண்டும் என்றும், வரைவில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
பாலி­சியை ரத்து செய்­வ­தற்­கான பிரி லுக் காலம் உள்­ளிட்ட, முக்­கிய அம்சங்கள் தெரி­விக்­கப்­பட வேண்டும். ஆனால், யுலிப் போன்ற பாலி­சிகள் குறித்து முழு­மை­யாக அறிந்து கொள்ள, சேமிப்பு பகுதி மீதான பலன் என்ன என்­பதும் குறிப்­பி­டப்­பட்டால், நன்­றாக இருக்கும் என, வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர். இந்த வரைவு நெறி­முறைகள் குறித்து வரும், 15ம் தேதி வரை பொது­மக்கள் கருத்து தெரி­விக்­கலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)