பதிவு செய்த நாள்
14 பிப்2017
00:37

புதுடில்லி : ஆயுள் காப்பீட்டு பிரீமியம் வசூல், கடந்த ஜனவரியில், 13 ஆயிரத்து, 138 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
உள்நாட்டில், எல்.ஐ.சி., உட்பட, 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. நடப்பாண்டின் ஜனவரியில் மட்டும், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், புதிய பிரீமியம் மூலம், 13 ஆயிரத்து, 138 கோடி ரூபாய் வருவாய் வசூலித்துள்ளன. இது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், 10 ஆயிரத்து, 283.89 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த மாதம், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் வசூலித்த மொத்த பிரீமியம் வருவாயில், எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்கு, 66.4 சதவீதம் அதாவது, 8,724.59 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது.
இதர, 23 நிறுவனங்கள் வசூலித்த பிரீமியம் வருவாய், 4,413.50 கோடி ரூபாயாக உள்ளது. எஸ்.பி.ஐ., லைப் வசூலித்த, பிரீமியம் வருவாய், 1,094 கோடி ரூபாய்; ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல், 775 கோடி ரூபாய்; எச்.டி.எப்.சி., ஸ்டாண்டர்டு லைப், 773 கோடி ரூபாய்; மேக்ஸ் லைப், 235 கோடி ரூபாய் என்றளவில் உள்ளன. நடப்பு நிதியாண்டின், ஏப்., – ஜன., வரையிலான காலத்தில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் வசூலித்த பிரீமியம் வருவாய், 1.29 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 95 ஆயிரத்து, 871 கோடி ரூபாயாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|