பதிவு செய்த நாள்
16 பிப்2017
06:07

மும்பை : ‘இந்தியாவின் மின்னணு வர்த்தக சந்தை, 2021ல், 3.68 லட்சம் கோடி ரூபாயாக உயரும்’ என, ஆர்.ஏ.ஐ., மற்றும் பி.சி., குழுமம் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: இந்தியாவில், மின்னணு வர்த்தகம் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக, நுகர்வோர் சாதனங்கள், ஆயத்த ஆடைகள், வீட்டு சாமான்கள், ஆடம்பர பொருட்கள், ஆரோக்கிய பராமரிப்பு, நுகர்பொருட்கள், உணவு, மளிகை சாமான்கள் உள்ளிட்ட பிரிவுகளில், வலைதளம் வாயிலான வர்த்தகம் அதிகரித்து வருகிறது.
உணவு, மளிகைகுறிப்பாக, நுகர்வோர் சாதனங்கள் துறையில், வலைதள பரிவர்த்தனைகள் பெருகி வருகின்றன; இத்துறையில், இவ்வகை மின்னணு வர்த்தகத்தின் வளர்ச்சி, தற்போது, 13 – 15 சதவீதமாக உள்ளது. இது, 2025ல், 38 – 42 சதவீதமாக உயரும். மின்னணு வர்த்தக சந்தையில், இத்துறை தான், அதிகபட்ச வளர்ச்சியை காணும். உணவு மற்றும் மளிகை சாமான்கள் துறையில் தான், மின்னணு வர்த்தகம் மிக குறைவான வளர்ச்சி விகிதத்தை கொண்டிருக்கும்.
இத்துறையில், மின்னணு பரிவர்த்தனை வளர்ச்சி, தற்போது, 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இது, அடுத்த எட்டு ஆண்டுகளில், 1 – 3 சதவீதம் என்ற அளவிற்கே உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த, 2013 – 16 வரையில், வலைதளம் வாயிலாக பொருட்கள் வாங்குவது, 3 சதவீதத்தில் இருந்து, 23 சதவீதமாக வளர்ச்சி பெற்றுள்ளது. இதே காலத்தில், நுகர்வோரின் மின்னணு சார்ந்த பயன்பாடு, 9 சதவீதத்தில் இருந்து, 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஸ்மார்ட் போன்வலைதள நிறுவனங்கள், போட்டி காரணமாக, தள்ளுபடி சலுகைகளை அறிவிக்கின்றன. அதனால், நுகர்வோர்கள், வலைதளங்களில் பொருட்கள் வாங்க விரும்புகின்றனர். மேலும், வீட்டில் இருந்தபடியே பொருட்களை சுலபமாக பெற முடிவதும், மின்னணு சந்தையின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. இவ்வசதி காரணமாக, வலைதளங்களில் பொருட்கள் வாங்குவது, கடந்த இரு ஆண்டுகளில், 15 சதவீதம் அதிகரித்து, 55 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மின்னணு வர்த்தகம் பெருக, ஸ்மார்ட் போன் பயன்பாடும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், ஸ்மார்ட் போன் பயன்பாடு, 3 சதவீதத்தில் இருந்து, 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், ஸ்மார்ட் போன் விலையும், 50 சதவீதம் குறைந்துள்ளது. இது போன்ற காரணங்களால், தற்போது, 40,200 – 53,600 கோடி ரூபாய் என்றளவில் உள்ள, மின்னணு சந்தை, 2021ல், 3.35 – 3.68 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ளதாக மாறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|