பதிவு செய்த நாள்
16 பிப்2017
15:18

புதுடில்லி : இ-விசா மூலம் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இலவச சிம் கார்டு வழங்கும் திட்டத்தை மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா நேற்று துவங்கி வைத்தார்.
பிஎஸ்என்எல்., நிறுவனம் இந்த சிம் கார்டுகளை வழங்க உள்ளது. இவை இலவசமாக ரூ.50 டாக்டைம் மற்றும் 50 எம்பி இன்டர்நெட் டேட்டா கொண்டதாக இருக்கும். இந்த சிம் கார்டுகளை பயன்படுத்தி, வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகள், இங்கு தரையிறங்கியதும் தங்களின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கலாம்.
சுற்றுலா பயணிகள் இந்த சிம் கார்டு மூலம் சுற்றுலாத்துறை உதவி எண்ணை பயன்படுத்தி 24 மணிநேரமும், தங்களின் மொழியிலேயே தகவல் பெறலாம். மொத்தம் 12 வெளிநாட்டு மொழிகளில் இந்த இலவச சேவை சுற்றுலா துறையால் வழங்கப்பட உள்ளது. ரஷ்யா அல்லது ஜப்பான் நாட்டு சற்றுலா பயணிகள், மிக எளிதாக இந்த உதவி எண் சேவையை பயன்படுத்தலாம்.
முதல்கட்டமாக டில்லி இந்தியா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இந்த இலவச சிம் கார்டு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் உள்ள மற்ற 15 விமான நிலையங்களிலும் இந்த சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. 161 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு இ-சேவை மூலம் விசா அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|