பதிவு செய்த நாள்
17 பிப்2017
04:46

மும்பை: சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, ஐ.பி.எம்.,மின் தலைவர் கின்னி ரோமட்டி கூறியதாவது: இந்தியாவில், சாப்ட்வேர் வல்லுனர்கள் அதிகம் உள்ளனர். அதனால், மனிதர்களை போல, பகுத்தறிந்து செயல்படும், சாப்ட்வேர்களை உருவாக்கு வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதில் தான், இந்தியாவின் எதிர்காலம் அடங்கி உள்ளது. வரும், 2020ல், உலகிலேயே, அதிக அளவில், சாப்ட்வேர் வல்லுனர்களைக் கொண்ட நாடாக, இந்தியா உருவெடுக்கும். தற்போது, 30 லட்சத்திற்கும் அதிகமான சாப்ட்வேர் புரோகிராமர்கள், குறைந்தபட்சம், 10 சதவீத, ‘ஆப்’களை உருவாக்குகின்றனர்.
அறிவுசார் சாப்ட்வேர்களை உருவாக்குவதற்கு வசதியாக, இந்தியாவும், மின்னணு தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு வேகமாக மாறி வருகிறது. ஆகவே, எதிர்காலத்திற்கான அறிவுசார் சாப்ட்வேர் உருவாக்கத்தில், வேறு எந்த நாட்டையும் விட, இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|