பதிவு செய்த நாள்
17 பிப்2017
04:47

ஆமதாபாத்: சீனாவைச் சேர்ந்த, ஜியோமி நிறுவனம், அதன் மொபைல் போன் வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக, இந்தியாவில், பிரத்யேக விற்பனை மையங்களை அமைக்க உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் இந்திய பிரிவின் உயரதிகாரி மனு ஜெயின் கூறியதாவது: கடந்த ஆண்டு, மார்ச் – ஏப்., மாதங்களில், சிங்கிள் பிராண்டு சில்லரை விற்பனையின் கீழ், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, விற்பனை மையங்கள் அமைக்க, மத்திய அரசிடம் உரிமம் கோரி விண்ணப்பித்திருந்தோம். இதற்கு, விரைவில் அனுமதி கிடைக்கும் என, நம்புகிறோம்.இந்த மையங்கள் மூலம், மொத்த வியாபாரிகளின்றி, மொபைல் போன்கள் வாடிக்கையாளர்களுக்கு நேரடி விற்பனை செய்யப்படும். இதனால், மொபைல் போன்கள், குறைந்த விலையில் கிடைக்கும். நிறுவனத்தின் விற்பனையில், விற்பனை மையங்கள் வாயிலான பங்களிப்பு, 25 – 30 சதவீதமாக உயர்த்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
ஜியோமி நிறுவனம், ஒவ்வொரு காலாண்டும், 25 – 30 லட்சம் மொபைல் போன்களை விற்பனை செய்கிறது. இதில், 75 சதவீத மொபைல் போன்கள், இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|