பதிவு செய்த நாள்
17 பிப்2017
04:48

புதுடில்லி: உலகளவில், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான திட்டங்களில், ஏராளமான நிறுவனங்கள், கோடிக் கணக்கான டாலர்களை இழப்பது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
அசெஞ்சர் ஸ்டிராடஜி நிறுவனம், 25 ஆயிரத்திற்கும் அதிகமான நுகர்வோரிடம், அவர்கள் வாங்கும், ‘பிராண்டு’ பொருட்கள் குறித்தும், அதே பிராண்டை, எவ்வளவு காலத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர் என்பது பற்றியும் ஆய்வு மேற்கொண்டது. அதில், ஆய்வில் பங்கேற்ற இந்தியர்களில், 86 சதவீதம் பேர், கடந்த ஓராண்டில், ஒரு பிராண்டில் இருந்து, வேறு பிராண்டு பொருட்களுக்கு மாறியுள்ளது தெரிய வந்து உள்ளது. அதனால், வாடிக்கையாளர்களை கவரவும், தக்க வைத்துக் கொள்ளவும், ரொக்கத் தள்ளுபடி, பரிசு, இலவச ‘ரீசார்ஜ்’ உள்ளிட்ட, பல்வேறு சலுகைகளுக்காக, நிறுவனங்கள் செலவழிக்கும் கோடிக் கணக்கான டாலர் பணம், அதற்கான இலக்கை அடையாமல் வீணாவதாக, ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தங்கள் தனிப்பட்ட விபரங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பிராண்டுகளுக்கு, தொடர்ந்து விசுவாசமாக உள்ளதாக, 81 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர். குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோரை பின்பற்றி, ஒரே பிராண்டு பொருட்களை பயன்படுத்துவதாக, 62 சதவீதம் பேர் கூறியுள்ளனர். சமூகநல ஆதரவு நிறுவனங்களின் பிராண்டுகளை தொடர்ந்து பயன்படுத்துவதாக, 64 சதவீதத்தினர் தெரிவித்து உள்ளனர். சந்தை போட்டி, புதிய அறிமுகங்கள், கவர்ச்சிகரமான சலுகைகள், அதிகரித்து வரும் மின்னணு பயன்பாடு போன்ற வற்றால், நுகர்வோர், ஒரே பிராண்டு பொருட்களில் விசுவாசமாக இருப்பது குறைந்து வருவதாக, ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|