பதிவு செய்த நாள்
25 பிப்2017
12:11

நோக்கியா நிறுவனத்தின் பழைய 3310 பீச்சர் போன் புதுப்பிக்கப்பட்டு, நோக்கியா 3310 ரீபூட் என் பெயரில் மீண்டும் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் இதன் விலை, வடிவமைப்பு உள்ளிட்ட விஷயங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
புதிய நோக்கியா மொபைல் போன்கள், நாளை (பிப்ரவரி 26) மாலை பார்சிலோனியாவில் நடக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. இந்த புதிய நோக்கியா 3310 ரீபூட் போனில், டிஸ்ப்ளே பெரியதாகவும், பட்டன்கள் மாற்றி அமைக்கப்பட்ட கீபோர்டாகவும் வழங்கப்பட உள்ளது. கலர் டிஸ்ப்ளே கொண்ட இந்த பீச்சர் போன் ஸ்மார்ட்போனாக இருக்காது. ஆனால் ஸ்லீம்மாகவும், முந்தைய போனை விட குறைந்த எடை கொண்டதாகவும் இருக்கும்.
சிவப்பு, மஞ்சள், பச்சை என 3 நிறங்களில் கிடைக்கும். இதன் விலை ரூ.4000 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. நோக்கிய 3310 மட்டுமின்றி, மற்ற 2 பட்ஜெட் விலை போன்களான நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 மாடல்களும் இந்த வாரத்தில் புதுப்பிக்கப்பட்டு, வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா 3310 அறிமுக விழாவை யூட்யூப் மற்றும் பேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங் எனப்படும் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளதாக ஹச்எம்டி நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|