பதிவு செய்த நாள்
25 பிப்2017
16:31

புதுடில்லி : டிரைவர் இல்லாமல் தானாக இயங்கும் கார்களை தயாரித்து, அதனை சோதனை செய்யும் முயற்சியில் முன்னணி கார் நிறுவனங்கள் இறங்கி உள்ளன.
டெஸ்லா மோட்டார்ஸ், சீனாவின் பெய்டு, கூகுள், யூபர், மெர்சிடஸ், போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட கார் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகம் முழுவதிலும், முக்கிய நகரங்களில் இந்த டிரைவர் இல்லா கார்களை சோதித்து வருகின்றன. வால்வோ நிறுவனம், வால்வா எக்ஸ்.சி.90 ஸ் என்ற டிரைவர் இல்லா காரை தயாரித்து, செப்டம்பர் மாதம் முதல் அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகர சாலைகளில் சோதனை செய்து வருகிறது. யூபர் நிறுவனம் கலிபோர்னியாவில் இந்த சோதனையை நடத்தி வருகிறது.
2016 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில், இதற்கான அனுமதி தரப்பட்டுள்ளது. இதனால் விரைவில் இந்தியாவிலும் டிரைவர் இல்லா கார்கள் விற்பனைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. சாலை போக்குவரத்து துறையிடம் இருந்து இதற்கான அனுமதி கிடைத்த பிறகு, செமி ஆட்டோனமஸ் மற்றும் முழு ஆட்டோனமஸ் சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்கள் இந்தியாவிலும் சோதனை செய்யப்பட உள்ளதாக கார் தயாரிப்பு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|