பதிவு செய்த நாள்
26 பிப்2017
01:18

மும்பை : பிரபாத் டெய்ரி, ஐக்கிய அரபு நாடுகளில், சீஸ் உள்ளிட்ட பால் பொருட்களை அதிகளவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. பிரபாத் டெய்ரி நிறுவனம், பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், தன் சர்வதேச விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஐக்கிய அரபு நாடுகளில், பிரீமியம் சீஸ் உள்ளிட்ட பால் பொருட்களை விற்பனை செய்ய, இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஐக்கிய அரபு உள்ளிட்ட பல நாடுகளில், பால் பொருட்களுக்கு அதிக தேவை காணப்படுகிறது. இது, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்நாடுகள், பால் பொருட்கள் தேவையை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்கின்றன. குறிப்பாக, சவுதி அரேபியா, 70 சதவீத பால் பொருட்களை இறக்குமதி செய்கிறது. எனவே, அந்த வாய்ப்பை எங்கள் நிறுவனம் பயன்படுத்தி, பிரீமியம் சீஸ் உள்ளிட்ட பால் பொருட்களை, ஐக்கிய அரபு நாடுகளில் விற்க திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு, சில பால் பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதற்கு, வாடிக்கையாளரிடம் வரவேற்பு இருந்தது. இதன் மூலம், எங்கள் சர்வதேச பால் விற்பனை அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|