பதிவு செய்த நாள்
26 பிப்2017
01:21

அமராவதி : ‘‘சட்டத் துறை வல்லுனர்களுக்கு, வணிக நீதிமன்றங்கள், சந்தை போட்டி கட்டுப்பாட்டு சட்டங்கள், மின்னணு துறை சட்டங்கள் உள்ளிட்ட, புதிய நீதி பரிபாலன நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம்,’’ என, சுப்ரீம் கோர்ட் நீதிபதி மதன் பி.லோகுர் வலியுறுத்தி உள்ளார். ஆந்திரா தலைநகர் அமராவதியில், ‘அறிவுசார் சொத்துரிமை, வர்த்தகம் மற்றும் அதிகரிக்கும் சட்டங்கள்’ என்ற சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. ஆந்திரா பொருளாதார வளர்ச்சி வாரியம், ஜப்பான் வெளியுறவு வர்த்தக அமைப்புடன் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆய்வு தேவைகருத்தரங்கை துவக்கி வைத்து, மதன் பி.லோகுர் பேசியதாவது:நாம் ஒவ்வொருவரும், அறிவுசார் சொத்துரிமை பிரச்னையால், ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்படுகிறோம். அனைத்து துறைகளிலும், அறிவுசார் சொத்துரிமைகள் உள்ளன; அவை குறித்த விழிப்புணர்வு, சட்ட வல்லுனர்களாகிய நமக்கு மிகவும் அவசியமாக உள்ளது. நாடு முழுவதும், அதிகளவில் வணிக நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு, மும்பை, டில்லி நகரங்களில் மட்டும் அதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் தொழில் துவங்குவதை சுலபமாக்குவதில், வணிக நீதிமன்றங்களின் பங்களிப்பு, குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும். அதனால், இத்தகைய நீதிமன்றங்களை அமைப்பது குறித்து, பிற நகரங்களிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சர்வதேச அளவில், வணிக நீதிமன்றங்கள் அமைப்பது, சந்தை போட்டியை ஒழுங்குபடுத்துவது, ‘சைபர்’ எனப்படும், மின்னணு துறைகளுக்கான புதிய சட்டங்கள் வகுப்பது ஆகியவை அதிகரித்து வருகின்றன. இது போன்ற நீதி பரிபாலன நடைமுறைகள் குறித்து, நாமும் விவாதித்து வருகிறோம். அதில், ஒருமித்த கருத்து எட்டப்பட்டால் மட்டுமே, நீதித் துறையில், சீர்த்திருத்தங்களை செய்ய முடியும்.அறிந்திருப்பது முக்கியம்நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட சட்ட வல்லுனர்கள் அனைவரும், புதிய நீதி பரிபாலன நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும்; அவற்றுக்கு என்ன சட்டங்கள் உள்ளன; எத்தகைய சட்டங்களை உருவாக்கலாம் என்பது தெரிந்திருக்க வேண்டும். அதன்பின் தான், நீதித் துறையில் சீர்திருத்தங்களை கொண்டு வர முடியும். பார் கவுன்சில் துணையின்றி, அத்தகைய சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியாது. அனைவரும், உலக நிகழ்வுகளை அறிந்திருப்பது முக்கியம். இது, நம்மை போன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் அல்லது சாதாரணமானவர்களுக்கும் கூட பொருந்தும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில், தொழில் துவங்குவதை சுலபமாக்குவதில், வணிக நீதிமன்றங்களின் பங்களிப்பு, குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும். அதனால், இத்தகைய நீதிமன்றங்களை அமைப்பது குறித்து, டில்லி, மும்பை மட்டுமின்றி, பிற நகரங்களிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மதன் பி.லோகுர்சுப்ரீம் கோர்ட் நீதிபதி
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|