பதிவு செய்த நாள்
27 பிப்2017
00:02

கடந்த சில ஆண்டுகளில், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம், தற்போது மிகவும் குறைவாக உள்ளது. ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள், வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. வட்டி விகிதம் குறைந்துள்ள சூழல், புதிதாக கடன் பெற இருப்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திஉள்ளது. ஏற்கனவே கடன் பெற்றவர்களுக்கும் இதனால் பலன் உண்டாகும்.
வட்டி விகிதம் குறைந்திருப்பதால், மாதத் தவணை குறையவும், அதற்கேற்ப கடனுக்கான காலமும் குறையும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், கடன் தொகையின் ஒரு பகுதியை முன் கூட்டியே செலுத்துவதற்கும் இது சரியான நேரம் என, வல்லுனர்கள் கருதுகின்றனர். இதன் மூலம் கடன் சுமையை மேலும் குறைக்கலாம்.
நீண்ட கால திட்டமிடல்வீட்டுக்கடன் என்பது நீண்ட கால பொறுப்பாகும். இந்த கடனை அடைக்க செலுத்தும் மாதத் தவணை, சம்பளத்தின் கணிசமான பகுதியை எடுத்துக் கொள்ளும். எனவே, வாய்ப்பு கிடைக்கும் போது கடன் அசல் தொகையில் ஒரு பகுதியை முன் கூட்டியே செலுத்துவதன் மூலம் செலுத்த வேண்டிய அசலை குறைக்கலாம். அசல் தொகைக்கேற்ப வட்டி அமையும் என்பதால் மாதத் தவணை குறையும். பொதுவாக வங்கிகள் மாதத் தவணையை குறைக்காமல் கடனுக்கான காலத்தை குறைக்கின்றன. எனவே, முன் கூட்டியே ஒரு தொகையை செலுத்துவதன் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே கடனை அடைத்துவிட முடியும்.
பொதுவாகவே, வீட்டுக்கடனுக்கான தொகையில் ஒரு பகுதியை, இடைப்பட்ட காலத்தில் வாய்ப்பு கிடைக்கும் போது செலுத்துவது, கடன் சுமையை குறைப்பதற்கான உத்தியாக பரிந்துரைக்கப்படுகிறது. என்றாலும், வட்டி விகிதம் குறைந்துள்ள சூழல் இதற்கு இன்னும் ஏற்றதாக கருதப்படுகிறது. இதற்கென ஒரு தொகையை சேமித்து வந்து, கணிசமான தொகை சேர்ந்த பின், அசலின் ஒரு பகுதியாக செலுத்தலாம்.
வட்டி சேமிப்புவட்டி விகிதம் குறையும் போது, கடனில் ஒரு பகுதியை செலுத்தி அசலை குறைக்கும் போது, அதற்கேற்ப மொத்தமாக செலுத்த வேண்டிய வட்டியும் குறையும்; இது சேமிப்பாக அமையும். வட்டி விகிதம் இன்னும் சில காலாண்டுகளுக்கு இதே நிலையில் நீடிக்கும் வாய்ப்புள்ளதால், கடனில் ஒரு பகுதியை திருப்பி செலுத்துவது தொடர்பாக திட்டமிட இது ஏற்ற நேரம். மேலும், எதிர்காலத்தில் வட்டி விகிதம் உயரும் வாய்ப்பு நிச்சயம் உள்ளது. அவ்வாறு நேரும் போது, ஏற்கனவே ஒரு தொகையை செலுத்தி, அசலை குறைத்து விட்டதால், வட்டி விகித உயர்வின் சுமை குறைவாகவே இருக்கும். எனவே, மாதந்தோறும் உபரியாக உள்ள தொகையை, கடனை அடைக்கும் நோக்கத்துடன் சேமிக்கத் துவங்கலாம்.
எனினும், வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்த முற்படும் போது, அதே தொகையை வேறு விதமாக முதலீடு செய்தால் கிடைக்கக் கூடிய பலனையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வது நல்லது. இரண்டில் எந்த நடவடிக்கை அதிக பலன் தரும் என்பதையும் பரிசீலிக்க வேண்டும். மேலும் வீட்டுக் கடனுக்கு வரிச்சலுகை இருப்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|