உணவு சாரா பொருட்கள் விற்­ப­னையில் அன்­னிய நேரடி முத­லீட்­டிற்கு அனு­ம­தியா?உணவு சாரா பொருட்கள் விற்­ப­னையில் அன்­னிய நேரடி முத­லீட்­டிற்கு ... ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.82 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.82 ...
‘அமெ­ரிக்­கா­விற்கு திற­மை­யான வல்­லு­னர்கள் வரு­வதை அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்க்­க­வில்லை’: மகிந்­திரா குழுமம் தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2017
23:52

வாஷிங்டன் : ‘‘புதிய கண்­டு­பி­டிப்­பு­க­ளுக்கு தேவைப்­படும் திற­மை­யான வல்­லு­னர்­களின் வரு­கையை, அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்க்­க­வில்லை,’’ என, அமெ­ரிக்­காவில், டிராக்டர் விற்­ப­னையில் ஈடு­பட்டு வரும், மகிந்­திரா யு.எஸ்., நிறு­வ­னத்தின் தலைவர் மணி ஐயர் தெரி­வித்து உள்ளார்.
டொனால்டு டிரம்ப், உள்­நாட்டில் வேலை­வாய்ப்பை அதி­க­ரிக்கும் நோக்கில், வெளி­நாட்­டி­ன­ருக்­கான, ‘எச்1 பி’ விசா கட்­ட­ணத்தை, இரு மடங்­காக உயர்த்தி உள்ளார். இந்த கட்­டண உயர்வு நடை­மு­றைக்கு வந்தால், அமெ­ரிக்­காவில் உள்ள, இந்­திய, ஐ.டி., நிறு­வ­னங்கள் பாதிக்­கப்­படும். அவை, இந்­தி­யாவில் உள்ள, தாய் நிறு­வ­னங்­களில் இருந்து வல்­லு­னர்­களை வர­வ­ழைத்து, பணி­களை முடிக்க, அதிகம் செல­விட நேரிடும். அதனால், அமெ­ரிக்­காவில் உள்ள, இந்­தியா உள்­ளிட்ட, இதர நாடு­களைச் சேர்ந்த நிறு­வ­னங்கள், உள்­நாட்டு வல்­லு­னர்­களை பணிக்கு அமர்த்த வேண்­டிய நிலைக்கு ஆளாகும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
இது குறித்து, வாஷிங்­டனில், செய்­தி­யா­ளர்­க­ளிடம் மணி ஐயர் கூறி­ய­தா­வது: டொனால்டு டிரம்ப், திற­மை­யான வல்­லு­னர்­களின் குடி­யேற்­றத்­திற்கு எதி­ரா­னவர் அல்ல. அவர், யாரும் அமெ­ரிக்­காவில் குடி­யேற வேண்டாம் என, கூறு­வ­தா­கவும் நான் நினைக்­க­வில்லை. புதிய கண்­டு­பி­டிப்­புகள் மற்றும் தொழில்­நுட்­பங்­க­ளுக்கு தேவை­யான வல்­லு­னர்கள் தான், அவ­ருக்கு தேவை. இந்­தி­யாவில், அத்­த­கைய அறி­வியல் வல்­லு­னர்கள் ஏரா­ள­மாக உள்­ளனர். அமெ­ரிக்­காவின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு, இந்­திய நிறு­வ­னங்கள், குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை வழங்கி வரு­கின்­றன.
அதே சமயம், அமெ­ரிக்­காவில் உள்ள நிறு­வ­னங்கள், பணி­க­ளுக்கு வெளி­நாட்­டி­னரை சார்ந்­தி­ராமல், உள்­நாட்­டி­னரை எப்­படி பயன்­ப­டுத்திக் கொள்­வது என்­பது பற்­றியும் சிந்­திக்க வேண்டும். அமெ­ரிக்­காவில், குறிப்­பி­டத்­தக்க முத­லீ­டு­களை மேற்­கொண்டு திட்­டங்­களை செயல்­ப­டுத்தும் போது, உள்­நாட்டு பொரு­ளா­தா­ரத்­திற்கு, எந்த வகையில் கூடுதல் பங்­க­ளிப்பை வழங்க முடியும் என யோசித்து, அதன்­படி வெளி­நாட்டு நிறு­வ­னங்கள் செயல்­பட வேண்டும். அப்­படி செயல்­பட்டால், குடி­யேற்றம், ‘எச்1 பி’ விசா உள்­ளிட்­டவை தொடர்­பாக, எந்த கேள்­வியும் எழாது. எந்த நாடும், உள்­நாட்டு வேலை­வாய்ப்பை இழக்க விரும்­பாது. அதனால், டிரம்ப், உள்­நாட்டு வேலை­வாய்ப்பு தொடர்­பாக எடுத்­துள்ள கொள்கை நிலைப்­பாடு, சரி­யா­னது தான் என்பேன். இவ்­வாறு அவர் கூறினார்.
வர்த்­தக சூழலை மேம்­ப­டுத்த முயற்சிஅமெ­ரிக்க அதிபர் டிரம்ப், இந்­திய பிர­தமர் மோடி ஆகியோர், வர்த்­தக சூழலை மேம்­ப­டுத்த தீவிர முயற்சி மேற்­கொண்டு உள்­ளனர். டிரம்ப், வணிக பரம்­ப­ரையைச் சேர்ந்­தவர் என்­பதால், பொரு­ளா­தார ஸ்திரத்­தன்­மைக்­காக, கட்­டுப்­பா­டு­களை நீக்கி, வரி­களை குறைக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்ளார். -மணி ஐயர், தலைவர், மகிந்­திரா யு.எஸ்., நிறு­வனம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)