பதிவு செய்த நாள்
02 மார்2017
00:02
புதுடில்லி : ஹூண்டாய் மோட்டார், கடந்த பிப்ரவரியில், 52 ஆயிரத்து, 734 கார்களை விற்பனை செய்துள்ளது.
இது, 2016ம் ஆண்டின் இதே மாதத்தில், 49 ஆயிரத்து, 729 ஆக குறைந்து இருந்தது. இதே கால ஒப்பீட்டில், இந்நிறுவனத்தின் கார்கள் ஏற்றுமதி, 15.5 சதவீதம் உயர்ந்து, 9,013 கார்களில் இருந்து, 10 ஆயிரத்து, 407 ஆக அதிகரித்துள்ளது. உள்நாட்டு கார்கள் விற்பனை, 4 சதவீதம் அதிகரித்து, 40 ஆயிரத்து, 716ல் இருந்து, 42 ஆயிரத்து, 327 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய பட்ஜெட்டில், மோட்டார் வாகன துறையை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின; வருமான வரிச்சலுகையும் வழங்கப்பட்டது. இதனால், வாடிக்கையாளர்கள், கார்களை வாங்கி வருகின்றனர். வரும் காலங்களில், கார் விற்பனை சிறப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|