பதிவு செய்த நாள்
03 மார்2017
16:15

சியோல் : இணையதளத்தில் வெளியாகியுள்ள புதிய டிரேட்மார்க்கில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் மடிக்கும் வசதி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எக்ஸ் என அழைக்கப்படலாம் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவலின்படி, சாம்சங் நிறுவனத்தின் புதிய ரக டிஸ்ப்ளேக்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. மடிக்கும் வசதி கொண்ட டிஸ்ப்ளே மற்றும் ஸ்மார்ட்போன் ஆகியவற்றை அறிமுகம் செய்யும் என கூறப்பட்டது. இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் மடிக்கும் வசதி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போனில் வளையும் வசதி கொண்ட AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்பட்டது. இத்துடன் கேலக்ஸி எக்ஸ் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எக்ஸ் மடிக்கப்பட்ட நிலையில் ஸ்மார்ட்போன் போன்றும் சாதாரண நிலையில் டேப்லெட் போன்றும் பயன்படுத்த முடியும். சாம்சங் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் கடந்த சில ஆண்டுகளாகவே தயாரிப்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|