‘பதப்படுத்திய உணவு பொருட்கள் ஏற்றுமதி குறையும்’‘பதப்படுத்திய உணவு பொருட்கள் ஏற்றுமதி குறையும்’ ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.66 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.66 ...
சிறு வியாபாரிகளுக்கு அவகாசம் தேவை: இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2017
05:30

புதுடில்லி : ‘பெரும்­பான்­மை­யான சிறு வியா­பா­ரி­கள், தங்­கள் வர்த்­த­கத்தை மின்­னணு முறைக்கு இன்­னும் மாற்­றா­த­ தால், ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி அம­லாக்­கத்தை, செப்., 1 வரை தள்ளி வைக்க வேண்­டும்’ என, இந்­திய வணி­கர்­கள் கூட்­ட­மைப்­பான, சி.ஏ.ஐ.டி., மத்­திய அர­சுக்கு கோரிக்கை விடுத்­துள்­ளது.
மத்­திய அரசு, ஜி.எஸ்.டி., திட்­டத்தை, ஜூலை, 1 முதல் அமல்­ப­டுத்த முடிவு செய்­துள்­ளது. பல முனை வரி­களை ஒழித்து, நாடு முழு­வ­தும் ஒரே வரி விகி­தத்தை கொண்டு வரும் இந்த புதிய வரி விதிப்பு முறைக்கு, சிறு வியா­பா­ரி­கள் தயா­ரா­க­வில்லை என, சி.ஏ.ஐ.டி., தெரி­வித்­துள்­ளது.
பயிற்சிஇவ்­வ­மைப்­பின் செக­ரட்­டரி ஜென­ரல் பிர­வீன் கந்­தல்­வால் கூறி­ய­தா­வது:தொழில்­நுட்­பம் சார்ந்த, ஜி.எஸ்.டி., திட்­டத்தை பின்­பற்­று­வ­தற்கு, ‘ஆன்­லைன்’ எனப்­படும், வலை­தள பயன்­பாடு அவ­சி­யம். இதன் கார­ண­மாக, 2 கோடிக்­கும் அதி­க­மான சிறு வணி­கர்­கள், தங்­கள் வர்த்­தக நடை­மு­றை­க­ளுக்கு, கம்ப்­யூட்­டரை பயன்­ப­டுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்டு உள்­ளது.ஆனால், தற்­போ­தைய நில­வ­ரப்­படி, 70 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மான சிறு வியா­பா­ரி­கள் இன்­னும், கம்ப்­யூட்­டர் சார்ந்த, மின்­னணு தொழில்­நுட்­பத்­திற்கு, தங்­கள் வர்த்­த­கத்தை மாற்­றா­மல் உள்­ள­னர்.
இத்­த­கைய சூழ­லில், வரும், 9 முதல், ஏப்., 12 வரை நடை­பெ­றும், பார்லி.,யின் இரண்­டா­வது கூட்­டத்­தொ­ட­ரில், மாதிரி ஜி.எஸ்.டி., சட்­டம் நிறை­வேற்­றப்­பட்டு, ஜூலை­யில் அமல்­ப­டுத்­தப்­படும் என, மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது. அனைத்து சிறு வியா­பா­ரி­களும், மின்­னணு தொழில்­நுட்­பத்­திற்கு மாறி, ஜி.எஸ்.டி.,யை அமல்­ப­டுத்த, இந்த இரண்டு மாத அவ­கா­சம் போதாது. வியா­பா­ரி­கள் தற்­போது, ‘வாட்’ எனப்­படும், மதிப்பு கூட்­டப்­பட்ட வரி திட்­டத்தை பின்­பற்­று­கின்­ற­னர். அவர்­கள், ஜி.எஸ்.டி., நடை­மு­றையை புரிந்து கொண்டு, சுல­ப­மாக அத்­திட்­டத்­திற்கு மாற, போதிய பயிற்­சி­யும், கால அவ­கா­ச­மும் தேவை.
விழிப்புணர்வுஅத­னால், ஜி.எஸ்.டி., அம­லாக்­கத்தை, செப்., 1க்கு தள்ளி வைக்க வேண்­டும். இடைப்­பட்ட காலத்­தில், மத்­திய அரசு, அனைத்து வணி­கர் சங்­கங்­களை ஒன்­றி­ணைத்து, வியா­பா­ரி­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., குறித்த பயிற்சி மற்­றும் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்­டும்.ஜி.எஸ்.டி., தொடர்­பான வியா­பா­ரி­களின் அனைத்து சந்­தே­கங்­க­ளை­யும், மத்­திய அரசு தெளி­வு­ப­டுத்த வேண்­டும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
‘வாபஸ்’ பெற வேண்­டும்மாநி­லங்­கள் இடை­யி­லான வர்த்­தக பரி­வர்த்­த­னை­க­ளுக்கு, ‘இ – பெர்­மிட்’ எனப்­படும், மின்­னணு அனு­மதி பெறும் திட்­டம், ‘ஒரே நாடு – ஒரே வரி’ என்ற, ஜி.எஸ்.டி., நோக்­கத்­தையே அழித்­து­வி­டும். ஜி.எஸ்.டி., திட்­டத்­தின் கீழ், மாநி­லங்­கள் இடை­யி­லான ஒவ்­வொரு சரக்கு பரி­வர்த்­த­னை­யை­யும், அரசு கண்­கா­ணிக்க முடி­யும். அப்­ப­டிப்­பட்ட சூழ­லில், ‘இ – பெர்­மிட்’ தேவை­யில்லை என்­பதே, வியா­பா­ரி­களின் கருத்து. அதை, மத்­திய அரசு வாபஸ் பெற வேண்­டும். -பிர­வீன் கந்­தல்­வால், செக­ரட்­டரி ஜென­ரல், சி.ஏ.ஐ.டி.,

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)