பதிவு செய்த நாள்
08 மார்2017
23:58

புதுடில்லி : டில்லியைச் சேர்ந்த புத்தக வெளியீட்டு நிறுவனமான, எஸ் சந்த், மூலதனச் சந்தையில் களமிறங்கி, பங்கு வெளியீட்டை மேற்கொள்ள உள்ளது. இதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த பங்கு வெளியீட்டில், 300 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளுடன், தற்போதைய பங்கு முதலீட்டாளர்களின், 60 லட்சம் பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன. பங்கு வெளியீட்டில் திரட்டும் நிதி, கடன்களை திரும்பத் தரவும், முன்னதாகவே கடன்களை செலுத்தவும் பயன்படுத்திக் கொள்ளப்படும். பங்கு வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை, எஸ்.சந்த் விரைவில் வெளியிடும் என, தெரிகிறது.
கடந்த, 2010க்குப் பின், 2016ல் தான், அதிக நிறுவனங்கள், மூலதனச் சந்தையில், அதிக அளவில் புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொண்டன. இந்த வகையில், கடந்த ஆண்டு, 26 நிறுவனங்கள், புதிய பங்குகளை வெளியிட்டு, 26 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டிக் கொண்டன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|