பரு­வ­ம­ழையால் டிராக்டர் விற்­பனை சூடு­பி­டித்­ததுபரு­வ­ம­ழையால் டிராக்டர் விற்­பனை சூடு­பி­டித்­தது ... ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 66.83 ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 66.83 ...
ஓட்டல் அறை­களின் வாடகை வருவாய் 9 சத­வீதம் உயர வாய்ப்பு: ‘இக்ரா’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2017
00:00

மும்பை : ‘இந்­திய ஓட்டல் அறை­களின் சரா­சரி வாடகை வருவாய், வரும், 2017 – 18ம் நிதி­யாண்டில், 9 சத­வீதம் உயரும்’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘இக்­ரா’வின் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
அதன் விபரம்: இந்­தி­யாவில், ஓட்டல் அறை­க­ளுக்­கான தேவை, நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கி­றது. தற்­போது கட்­டப்­பட்டு வரும் ஓட்­டல்­களில், 25 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட பிரீ­மியம் அறைகள் அமைய உள்­ளன. அடுத்த நான்கு ஆண்­டு ­களில், இந்த ஓட்­டல்­களின் கட்­டு­மானப் பணிகள் முடி­வ­டைந்து, அறைகள் பயன்­பாட்­டிற்கு தயா­ராகி விடும். இதை­ய­டுத்து, 2020ல், நாட்டின் முக்­கிய, 12 நக­ரங்­களில் உள்ள ஓட்­டல்­களில், பிரீ­மியம் அறை­களின் எண்­ணிக்கை, 1 லட்­சத்­திற்கும் அதி­க­மாக உயரும். இதில், அடுத்த ஒன்­றரை ஆண்­டு­களில், மும்பை தவிர்த்து, குறிப்­பாக, பெங்­க­ளூரு, கோல்­கட்டா நக­ரங்­களில், பெரும்­பான்­மை­யான பிரீ­மியம் அறைகள் பயன்­பாட்­டிற்கு வரும்.
பெருகி வரும் ஓட்டல் அறை­க­ளுக்கு ஏற்ப, அவற்றின் பயன்­பாடும் அதி­க­ரித்து வரு­கி­றது. இந்­தியா, பல்­வேறு நாடு­க­ளுடன் தாராள வர்த்­தக ஒப்­பந்தம் செய்து வரு­கி­றது. இதனால், இந்­தி­யா­விற்கு வெளி­நாட்டு தொழி­ல­தி­பர்கள், நிறு­வ­னங்­களின் தலைமை செயல் அதி­கா­ரிகள், வர்த்­த­கர்கள் ஆகி­யோரின் வருகை அதி­க­ரித்­துள்­ளது. அத்­துடன், உள்­நாட்டு சுற்­றுலா பய­ணிகள் எண்­ணிக்­கையும் பெருகி வரு­கி­றது. இதனால், ஓட்டல் அறை­களின் பயன்­பாடு மற்றும் தேவை உயர்ந்­துள்­ளது. நடப்பு நிதி­யாண்டில், ஏப்., – டிச., வரை­யி­லான ஒன்­பது மாதங்­களில், ஓட்டல் அறை­களின் சரா­சரி வாடகை மற்றும் பயன்­பாடு, தலா, 2 சத­வீதம் உயர்ந்­துள்­ளது.
இது, முந்­தைய, 3 – 4 சத­வீத மதிப்­பீட்டை விட குறை­வாகும். 2016 நவம்­பரில் மேற்­கொள்­ளப்­பட்ட, பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையால், ஒரு­சில நக­ரங்­களில், ஓட்டல் அறை­க­ளுக்­கான தேவை குறைந்து இருந்­தது. எனினும், நாடு தழு­விய அளவில், ஓட்டல் அறை­களின் பயன்­பாடு மற்றும் சரா­சரி வாடகை கட்­டணம் ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில், மதிப்­பீட்டு காலத்தில், அறை வாடகை வாயி­லான வருவாய், 4 சத­வீதம் உயர்ந்­துள்­ளது.
பண மதிப்பு நீக்­கத்தால், நீண்ட கால அளவில் கிடைக்க உள்ள பயன்­களும், ஜூலையில் அறி­மு­க­மாக உள்ள, சரக்கு மற்றும் சேவை வரியும், சுற்­றுலா துறை உட்­பட, மொத்த உள்­நாட்டு பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு உதவும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இது, ஓட்டல் அறை­களின் சரா­சரி வருவாய் வளர்ச்­சிக்கு துணை புரியும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.
வரும் நிதி­யாண்டில், 5 சிறப்பு சுற்­றுலா மண்­ட­லங்கள் அமைக்­கப்­படும்; ‘வியத்­தகு இந்­தியா – 2’ பிர­சார திட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் என, மத்­திய பட்­ஜெட்டில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. இத்­திட்­டங்கள், ஓட்டல் துறையின் நீண்ட கால வளர்ச்­சிக்கு உதவும்.-சுப்­ரதா ராய், மூத்த துணைத் தலைவர், ‘இக்ரா’

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)