பதிவு செய்த நாள்
10 மார்2017
23:43

புதுடில்லி : மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ‘இ – வாலட் ஸ்மார்ட் கார்டு, பேப்பர் வவுச்சர்’ போன்ற, மின்னணு தொழில்நுட்பம் சார்ந்த பணப் பரிவர்த்தனைகளுக்கு என, பிரத்யேக விதிமுறைகளை உருவாக்கி உள்ளது. இதன் மூலம், தனிநபர்கள் பாதுகாப்பான நிதி பரிவர்த்த னைகளை மேற்கொள்ள வும், பாதிப்பிற்கு ஒரு மாதத்தில் தீர்வு காணவும் முடியும்.
இந்த விதிமுறைகளின் படி, வாடிக்கையாளர்களின் புகார்களை விசாரிக்க, ‘இ – வாலட்’ நிறுவனங்கள், தனி அதிகாரியை நியமிக்க வேண்டும். மின்னணு பரிவர்த்தனைகளை உன்னிப்பாக கண்காணித்து, நாசவேலைகள் நடைபெறுவது தெரிய வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க, தகுந்த செயல் திட்டத்தை, நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும்.
நிறுவனங்கள், புதிய விதிமுறைகளை, அனைவருக்கும் புரியும் வகையில், அவற்றின் வலைதளம் மற்றும் மொபைல், ‘ஆப்’களில், வெளியிட வேண்டும். இந்த வரைவு விதிமுறைகள் குறித்த கருத்துக்களை, வரும், 20க்குள் தெரிவிக்கலாம் என, அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|