பதிவு செய்த நாள்
10 மார்2017
23:43
ஐதராபாத் : இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ், ‘டிவி, மொபைல்’ உள்ளிட்ட மின் சாதனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, இந்நிறுவனம், இல்லத்தரசிகளுக்காக நான்கு பிரிவுகளில், ‘ஏசி’ சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் இயக்குனர் நிதி மார்கண்டேய் கூறியதாவது:நிறுவனம், மகளிர் தினத்தை முன்னிட்டு, நான்கு பிரிவுகளில், 18 புதிய வகை, ‘ஏசி’ மின் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றை இல்லத்தரசிகளுக்கு அர்ப்பணித்திருக்கிறோம். இவை, வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அந்த சாதனத்தில் உள்ள கருவிகள், தரமாக தயாரிக்கப்பட்டு உள்ளதால், எளிதில் பழுது ஏற்படாது.
இந்தியாவில், ‘ஏசி’ சாதனங்களின் சந்தை விற்பனை அளவு, 40 லட்சம் என்றளவில் உள்ளது. புதிய சாதனங்களை அதிகளவில் அறிமுகம் செய்வதன் மூலம், ‘ஏசி’ சந்தையில், எங்கள் நிறுவனத்தின் பங்கு அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|