பொது காப்பீட்டு பிரீமியம் 15 சதவீதம் உயருகிறதுபொது காப்பீட்டு பிரீமியம் 15 சதவீதம் உயருகிறது ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 சரிவு ...
சோப்பு, ஷாம்பூ விலையை உயர்த்த திட்டம்; நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அதிரடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2017
00:03

புது­டில்லி : நுகர்­பொ­ருள் தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள், மூலப்­பொ­ருட்­கள் விலை உயர்வை கார­ணம் காட்டி, சோப்பு, ஷாம்பூ, பிஸ்­கட், நொறுக்கு தீனி உள்­ளிட்ட நுகர்­பொ­ருட்­களின் விலையை விரை­வில் உயர்த்த முடிவு செய்­துள்ளன.
அத­னால், நுகர்­பொ­ருட்­களின் விலை, 5 – 8 சத­வீ­தம் அதி­க­ரிக்க உள்­ளது. அதே­ச­ம­யம், ஐ.டி.சி., – தாபர் போன்ற ஒரு சில நுகர்­பொ­ருள் தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள், ஜூலை­யில், சரக்கு மற்­றும் சேவை வரி அம­லா­கும் வரை பொறுத்­தி­ருக்க திட்­ட ­மிட்­டுள்ளன. ஒரு­சில நிறு­வ­னங்­கள், லாப வரம்பை தக்க வைத்­துக் கொள்ள, விளம்­ப­ரங்­கள் உள்­ளிட்ட இதர செல­வு­களை குறைக்க முடி­வெ­டுத்­துள்ளன.
உற்பத்தி செலவுபண ­ம­திப்பு நீக்க நட­வ­டிக்­கை­யால், நடப்பு நிதி­யாண்­டில், அக்., – டிசம்­பர் வரை­யி­லான மூன்­றா­வது காலாண்­டில், பெரும்­பான்­மை­யான நுகர்­பொ­ருள் நிறு­வ­னங்­களின் வரு­வாய் வளர்ச்சி, தேக்க நிலையை கண்­டு உள்­ளது. இத்­த­கைய சூழ­லில், சோப்பு, ஷாம்பூ, கேசத்­திற்­கான ஜெல், சரும பரா­ம­ரிப்பு கிரீம் போன்­ற­வற்­றில் பயன்­படும் ‘பார்­ம­லின்’ என்ற மூலப்­பொ­ரு­ளின் விலை, கடந்த ஆறு மாதங்­களில், இரு மடங்கு உயர்ந்­துள்­ளது. தேங்­காய் மற்­றும் கொப்­பரை விலை அதி­க­ரித்­துள்­ள­தால், அவற்­றின் மூலம் தயா­ரிக்­கப்­படும், ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு பொருட்­க­ளுக்­கான உற்­பத்­திச் செலவு அதி­க­ரித்­துள்­ளது.
சர்க்­கரை உற்­பத்தி குறைந்­த­தால், அதன் விலை, 25 சத­வீ­தம் ஏற்­றம் கண்டு, இரண்டு மாதங்­களில், குவின்­டா­லுக்கு, 800 முதல் 1,000 ரூபாய் வரை உயர்ந்­துள்­ளது.இந்­நி­லை­யில், கோடைக்கு முன்­பா­கவே, பால் உற்­பத்­தி­யில் சரிவு ஏற்­பட்­டுள்­ளது. அதே­ச­ம­யம், சர்­வ­தேச சந்­தை­யில், பால் பவு­டர் விலை உயர்ந்­துள்­ள­தால், அதன் ஏற்­று­மதி அதி­க­ரித்து உள்­ளது.
தயாரிப்பு செலவுஇத­னால், உள்­நாட்­டில் பால் பவு­டர் கையி­ருப்பு குறைந்து, விலை உயர்­வுக்கு வழி வகுத்­துள்­ளது. பால் விலை, லிட்­ட­ருக்கு 2 ரூபாய் உயர்ந்­துள்­ளது.இதன் கார­ண­மாக, பிஸ்­கட், குளிர்­பா­னம், நொறுக்கு தீனி உள்­ளிட்ட உண­வுப் பொருட்­களின் தயா­ரிப்பு செலவு உயர்ந்­துள்­ளதை அடுத்து, அவற்­றின் விலையை உயர்த்த உள்­ள­தாக, நுகர்­பொ­ருள் நிறு­வ­னங்­கள் தெரி­வித்­து உள்ளன.
பால் பொருட்­கள்மூலப் பொருட்­களின் விலை, 4 – 5 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ள­தால், கடந்த, 5 – 6 மாதங்­களில், நிறு­வ­னத்­தின் லாப வரம்பு, 2 சத­வீ­தம் வரை சரி­வ­டைந்­துள்­ளது. அத­னால், ஷாம்பூ, சரும பாது­காப்பு கிரீம் போன்ற, ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு பொருட்­களின் விலையை, குறைந்­த­பட்­சம், 5 சத­வீ­தம் உயர்த்த உள்­ளோம். பால் விலை உயர்­வால், பால், பாலா­டைக் கட்டி போன்­ற­வற்­றின் விலை, 7 – 8 சத­வீ­தம் உயர வாய்ப்­புள்­ளது.-டி.டி.மோகன், இணை நிர்­வாக இயக்­கு­னர், கெவின்­கேர் நிறு­வ­னம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)