கடன் வாங்கி கல்யாணம் பண்ண விரும்பும் இளம் தலைமுறையினர்கடன் வாங்கி கல்யாணம் பண்ண விரும்பும் இளம் தலைமுறையினர் ... புதிய உச்சத்தில் ரூபாய் மதிப்பு : 65.22 புதிய உச்சத்தில் ரூபாய் மதிப்பு : 65.22 ...
சரக்கு மற்றும் சேவை வரியால்... கட்டுமான நிறுவனங்களின் வர்த்தகம் பெருகும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2017
00:40

மும்பை : பல முனை வரி­களை ஒழித்து, நாடு முழு­வ­தும் ஒரே வரி விதிப்­புக்கு வழி­வ­குக்­கும், ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி, ஜூலை 1ல் அம­லுக்கு வர உள்­ளது.
இத­னால், கிடங்­கு­கள், தொழிற்­கூ­டங்­கள், வினி­யோக மையங்­கள் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய, தொழில் ரியல் எஸ்­டேட் துறை, சிறப்­பான எழுச்சி காணும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.குறிப்­பாக, பெரிய கிடங்­கு­க­ளுக்­கான தேவை அதி­க­ரிக்கும் என்­ப­தால், கட்­டு­மான நிறு­வ­னங்­க­ளுக்கு ஏரா­ள­மான வர்த்­தக வாய்ப்­பு­கள் கிடைக்­கும் என, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.பெரிய நிறு­வ­னங்­கள், ஒரு மாநி­லத்­தில் இருந்து, வேறு மாநி­லத்­திற்கு சரக்­கு­களை அனுப்­பும் போது, பல­முனை வரி­களை செலுத்த வேண்­டி­யுள்­ளது. இதை தவிர்க்க, பல நிறு­வ­னங்­கள், அனைத்து நக­ரங்­க­ளி­லும் சிறிய கிடங்­கு­களை வைத்­துள்ளன.
தமி­ழ­கத்­தில், கிருஷ்­ண­கிரி மாவட்­டத்­தைச் சேர்ந்த, தொழில் நக­ர­மான ஓசூர், கர்­நா­டக எல்­லை­யில் அமைந்­துள்­ளது. உதா­ர­ண­மாக, பெங்­க­ளூ­ரைச் சேர்ந்த ஒரு நிறு­வ­னம், 30 கி.மீ., துாரத்­தில் உள்ள ஓசூ­ருக்கு சரக்கு அனுப்­பி­னால், மத்­திய விற்­பனை வரி, நுழைவு வரி உள்­ளிட்ட வரி­களை செலுத்த வேண்­டும்.இதை தவிர்க்க, அந்­நி­று­வ­னம், சென்­னை­யில் உள்ள அதன் கிடங்­கில் இருந்து, சரக்கை, ஓசூ­ருக்கு அனுப்­பு­கிறது. ஒரு­பு­றம் வரிச் செலவு குறைந்­தா­லும், அந்­நி­று­வ­னத்­திற்கு, சரக்கு போக்­கு­வ­ரத்து செலவு அதி­க­ரிக்­கிறது.
ஜி.எஸ்.டி., அம­லுக்கு வந்­தால், நாடு முழு­வ­தும் ஒரே வரி விதிப்பு இருக்­கும். அத­னால், நிறு­வ­னங்­கள், அனைத்து மாநி­லங்­க­ளி­லும், சிறிய கிடங்­கு­களை அமைப்­ப­தற்கு பதி­லாக, ஒரே இடத்­தில் பெரிய கிடங்கை அமைத்து, அங்­கி­ருந்து, பல்­வேறு மாநி­லங்­க­ளுக்கு சரக்­கு­களை சப்ளை செய்ய முடி­யும்.அத்­து­டன், கிடங்­கு­களில் முத­லீடு செய்­வதை தவிர்த்து, சரக்­கு­களை சேமிக்­க­வும், வினி­யோ­கிக்­க­வும், மூன்­றாம் நப­ரின் கிடங்­கு­களை பயன்­ப­டுத்­தும் சூழல் உரு­வா­கும். இத்­த­கைய பெரிய கிடங்­கு­களை அமைப்­ப­தன் மூலம், கட்­டு­மான நிறு­வ­னங்­க­ளுக்கு, குறைந்த முத­லீட்­டில், நிலை­யான வரு­வாய் கிடைக்­கும்.
கட்­டு­மான நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்­பான கிரெ­டாய், 2016 டிசம்­ப­ரில், கிடங்கு, மின் வணி­கம், மருந்து, நுகர்­பொ­ருள் உள்­ளிட்ட, பல்­வேறு துறை­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­களில் ஆய்வு மேற்­கொண்­டது.அதில், 65 சத­வீ­தத்­தி­னர், ஜி.எஸ்.டி.,யால், ஒட்­டு­மொத்த வியா­பா­ரம் நன்கு இருக்­கும் என, தெரி­வித்து உள்­ள­னர். கிடங்கு செல­வு­கள் குறை­யும் என, 45 சத­வீ­தம் பேர் கூறி­யுள்­ள­னர். நடை­முறை செல­வு­கள் குறை­யும் என, 42 சத­வீ­தத்­தி­னர் கூறி­யுள்­ள­னர். சரக்கு போக்­கு­வ­ரத்து மற்­றும் கிடங்கு சேவை­யில், 74 சத­வீத நிறு­வ­னங்­கள், ஓராண்­டிற்­குள், புதிய வரிக்­கான மாற்­றங்­களை செய்து முடித்­து­விட முடி­யும் என, நம்­பிக்கை தெரி­வித்து உள்ளன.
‘சிறிய கட்­டு­மான நிறு­வ­னங்­களின் சொத்து மதிப்பு உய­ர­வும், அவை, பெரிய நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து கூட்­டாக செயல்­ப­ட­வும், சொத்­து­கள் மீதான வரு­வாய்க்­கும், ஜி.எஸ்.டி., உத­வும்’- ‘கிரெ­டாய்’

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)