பதிவு செய்த நாள்
16 மார்2017
13:06

புதுடில்லி : அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜி5 பிளஸ் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போனின் துவக்க விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி5 3 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 4 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி என இரு வித மாடல்களில் கிடைக்கிறது. முதல் நாள் விற்பனையை முன்னிட்டு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.1500 தள்ளுபடி, ஸ்டேட் பேங்க் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு 10 சதவிகிதம் கேஷ்பேக், இலவசமாக மோட்டோ பல்ஸ் ஹெட்போன்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மாதம் ரூ.1,889 செலுத்தி தவணை முறையிலும் மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போனை வாங்க முடியும். சிறப்பம்சங்களாக மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் மற்றும் கைரேகை ஸ்கேனர் வசதி வழங்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் கொண்ட மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. மோட்டோ டிஸ்ப்ளே, ஷேக் ஜெஸ்ட்யூர் உள்ளிட்ட பிரபல மோட்டோ அம்சங்கள் கொண்டுள்ள மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. எனினும் கூகுள் அசிஸ்டண்ட் சேவையை வழங்கும் அப்டேட் பின்னர் தான் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிநவீன 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், 4K வீடியோ பதிவு செய்யும் வசதி மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பம்சங்களை சக்தியூட்ட 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும் 4ஜி, வோல்ட்இ, 3ஜி, வை-பை மற்றும் ப்ளூடூத் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் புதிய மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போனில் பைபேக் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்களின் மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போனினை எதிர்காலத்தில் எக்சேஞ்ச் செய்யும் போது உறுதியான தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|