வீடு வாங்க இனி பிஎப்., கணக்கிலிருந்து 90 % சதவீதம் வரை பணம் எடுக்கலாம்வீடு வாங்க இனி பிஎப்., கணக்கிலிருந்து 90 % சதவீதம் வரை பணம் எடுக்கலாம் ... விமான சேவையில் அன்னிய முதலீடு;  தயாராகிறது புதிய கொள்கை விமான சேவையில் அன்னிய முதலீடு; தயாராகிறது புதிய கொள்கை ...
ஸ்மார்ட்போன் விலை ரூ.10,000 வரை குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2017
15:53

புதுடில்லி : சோனி நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்த எக்ஸ்பீரியா XZ ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. அறிமுகம் செய்யும் போது ரூ.51,990க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்சமயம் இந்த ஸ்மார்டபோன் ரூ.41,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விலை குறைப்பு குறித்து சோனி சார்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றாலும் ரூ.10,000 குறைக்கப்பட்ட விலையில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை நடைபெற்று வருகிறது. பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட தளங்களில் சோனி எக்ஸ்பீரியா XZ ரூ.39,990 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. சிறப்பம்சங்களை பொருத்த வரை எக்ஸ்பீரியா XZ ஸ்மார்ட்போனில் 23 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சிறப்பான புகைப்படங்களை வழங்க ஏதுவாக நிறைய சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 5.2 இன்ச் ஃபுல் எச்டி ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 2.15 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர் மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் IP 65/68 ரேட்டிங் கொண்டிருப்பதால் வாட்டர் ப்ரூஃப் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள சோனி எக்ஸ்பீரியா XZ 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 256 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒற்றை சிம் கொண்ட மாடலும் வெளியிடப்பட்டுள்ளது, இதில் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. மற்ற எக்ஸ்பீரியா ஃபிளாக்‌ஷிப் போன்களை போன்றே XZ ஸ்மார்ட்போனிலும் கைரேகை ஸ்கேனர் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)