பதிவு செய்த நாள்
16 மார்2017
23:53

புதுடில்லி : தென்கிழக்கு ஆசிய பகுதியை அடிப்படையாக கொண்ட கிராப் நிறுவனம், கர்நாடக மாநிலம், பெங்களூரில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைத்துள்ளது.
கிராப் நிறுவனம், சிங்கப்பூர், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், மலேஷியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய ஆறு நாடுகளில் உள்ள, 35 நகரங்களில், தொழில்நுட்ப சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், தற்போது, இந்தியாவில் உள்ள பெங்களூரில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைத்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் அருள் குமரவேல் கூறியதாவது: பெங்களூரில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில், 200 பொறியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவர். இந்த பொறியாளர்கள் பணப் பரிமாற்றத்துக்கான, புதிய தொழில்நுட்பங்களை எங்கள் கிராப்பே சேவைக்கு வழங்குவர். இதன் மூலம், மொபைல் போன் மூலமான பணப் பரிவர்த்தனைகள் எளிமையாக்கப்படும். அதனால், தென்கிழக்கு ஆசிய பகுதியில், மொபைல் போன் மூலமான பரிவர்த்தனைகள் அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|