பதிவு செய்த நாள்
16 மார்2017
23:56

புதுடில்லி : மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: அமெரிக்க மத்திய வங்கி, நேற்று முன்தினம், அதன் வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் உயர்த்தி உள்ளது. கடந்த மூன்று மாதங்களில், இரண்டாவது முறையாக, வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்தாண்டு, மேலும் இருமுறை வட்டி உயர்த்தப்படலாம் என, கூறப்படுகிறது.
அமெரிக்க மத்திய வங்கியின் இந்த நடவடிக்கையை தாங்கும் வலிமை, இந்திய நிதிச் சந்தைக்கு உள்ளது. வட்டி விகிதம் படிப்படியாக உயருவது, வளரும் நாடுகளை எச்சரிக்கையுடன் செயல்பட வைக்கும். வட்டி விகித உயர்வினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை, சமாளிக்கக் கூடிய ஆற்றலை அதிகரித்துக்கொள்வதற்கு வாய்ப்பளிக்கும். இவ்வாறு அவர் கூறினார் .
இந்தியாவில், கடந்த இரு நாட்களாக, பங்குச் சந்தைகளில், வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. அன்னிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|