பதிவு செய்த நாள்
16 மார்2017
23:56

புதுடில்லி : மத்திய வர்த்தக துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த பிப்ரவரியில், நாட்டின் ஏற்றுமதி, 17.48 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,450 கோடி டாலராக உயர்ந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு பின், முதன்முறையாக, ஏற்றுமதியில், இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டு உள்ளது.
நடப்பு நிதியாண்டின், ஏப்., – பிப்., வரையிலான காலத்தில், ஏற்றுமதி, 2.52 சதவீதம் ஏற்றம் கண்டு, 24,540 கோடி டாலராக உள்ளது; இறக்குமதி, 3.67 சதவீதம் குறைந்து, 34,07௦ கோடி டாலராக உள்ளது. எண்ணெய் இறக்குமதி, பிப்ரவரியில், 60 சதவீதம் அதிகரித்து, 768 கோடி டாலராக உள்ளது. எண்ணெய் சாரா பொருட்கள் இறக்குமதி, 13.65 சதவீதம் உயர்ந்து, 257 கோடி டாலராக உள்ளது. தங்கம் இறக்குமதி பன்மடங்கு அதிகரித்து, 348 கோடி டாலராக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின், ஏப்., – பிப்., வரையிலான காலத்தில், எண்ணெய் இறக்குமதி, 7,674 கோடி டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டு, இதே காலத்துடன் ஒப்பிடுகையில், 1.76 சதவீதம் குறைவாகும். இதே காலத்தில், எண்ணெய் சாரா பொருட்கள் இறக்குமதி, 4.22 சதவீதம் குறைந்து, 26,395 கோடி டாலராக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|