பதிவு செய்த நாள்
17 மார்2017
14:17

புதுடில்லி : ரிலையன்ஸ் ஜியோ போட்டியை சமாளிப்பதற்காக, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனமும் புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது.
பிஎஸ்என்எல் அறிவித்துள்ள புதிய சலுகையின்படி, 28 நாட்களுக்கு ரூ.339 க்கு தினமும் 2 ஜிபி கொண்ட 3ஜி டேட்டா சேவையை வழங்க உள்ளது. இந்த சலுகை 90 நாட்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. 3ஜி சேவை என்றாலும் நாள் ஒன்றிற்கு 2ஜிபி டேட்டா வழங்குவது தொலைத் தொடர்பு துறையில் மிகச் சிறந்த சலுகை என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு, தொலைப்பேசி அழைப்பின் முதல் 25 நிமிடங்களுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை. 25 நிமிடங்களுக்கு பிறகும் தொடரும் அழைப்புக்களுக்கு நிமிடத்திற்கு 25 காசுகள் என்ற வீதத்தில் கட்டணம் வசூலித்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|