பதிவு செய்த நாள்
17 மார்2017
15:39

பீஜிங் : சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் கொண்ட மாடல் சீனாவில் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி எஸ் 8 ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் வழங்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. 6 ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் 128 ஜிபி மெமரி வழங்கப்படும் என்றும் இந்த பதிப்பு சீனாவில் மட்டும் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக 6 ஜிபி ரேம் கொண்டு இயங்கும் கேலக்ஸி சி9 ப்ரோ என்ற ஸ்மார்ட்போனினை சாம்சங் வெளியிட்டது. தென் கொரியாவில் கேலக்ஸி எஸ்8 முன்பதி ஏப்ரல் 7 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 17 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் விற்பனை ஏப்ரல் 21 ஆம் தேதி துவங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்8 சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.8 இன்ச் க்யூ.ஹச்.டி 1440x2560 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம். இத்துடன் புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமராவும், 8 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்படலாம். இன்டெர்னல் மெமரியுடன், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம் என்றும் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி கொண்டதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|