பதிவு செய்த நாள்
17 மார்2017
23:44

ஜெய்ப்பூர் : இந்திய காற்றாலை மின் சாதன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், டில்லியில், ‘விண்டெர்ஜி’ என்ற பெயரில், காற்றாலை தொடர்பாக, சர்வதேச கருத்தரங்கம் நடக்க உள்ளது.
இதுகுறித்து, அந்த கூட்டமைப்பின் பொதுச் செயலர் கிரி கூறியதாவது: டில்லியில், ஏப்., 25ல் இருந்து, 27 வரை நடக்கும், காற்றாலை தொடர்பான கருத்தரங்கில், அந்த துறையில் உள்ள வாய்ப்புகள், சவால்கள், அதற்கு தீர்வுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும். அதில், மத்திய, மாநில மின் துறை அதிகாரிகள், காற்றாலை மின் உற்பத்தியாளர்கள், காற்றாலை சேவை வழங்குவோர், கண்டு பிடிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். காற்றாலை மின்சார தயாரிப்பில், ராஜஸ்தான் மாநிலத்திற்கு நாட்டில் முக்கியமான இடம் இருக்கிறது. அதனால் அம்மாநிலத்திலிருந்து அதிகமானவர்கள் கலந்து கொள்வர் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|