பதிவு செய்த நாள்
19 மார்2017
03:48

புதுடில்லி : மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா, ராஜ்யசபாவில் கூறிய தாவது:தொலை தொடர்பு துறைக்கு தேவையான வல்லுனர்களை உருவாக்கும் பணியில், திறன் பயிற்சி குழு ஈடுபட்டு வருகிறது.தற்போது, தொலை தொடர்பு துறையில், ௪௦ லட்சம் வல்லுனர்கள் உள்ளனர். அடுத்த ஐந்து ஆண்டுகளில், மேலும், 47.80 லட்சம் வல்லுனர்கள் தேவைப்படுவர் என, கணிக்கப்பட்டு உள்ளது. 2021 – 22ம் நிதியாண்டில், தொலை தொடர்பு துறையில், வல்லுனர்களின் எண்ணிக்கை, 87.80 லட்சமாக உயரும்.இதை கருத்தில் கொண்டு, மத்திய தொலை தொடர்பு துறை, ஏராளமானோருக்கு, திறன் பயிற்சி அளித்து வருகிறது.அதில், 20 – - 25 சதவீதம் பேர், அதிக திறன் உள்ளவர்களாக உள்ளனர்.குறிப்பாக, பொறியாளர்கள், எம்.பி.ஏ., பட்டதாரிகள், கணக்கு தணிக்கையாளர்கள், மனிதவளத் துறை வல்லுனர்கள் ஆகியோருக்கு, திறன் பயிற்சி தேவைப்படுவதில்லை. அவர்களுக்கு, நிறுவனங்கள் வாயிலாக, 2 –- 4 வார எளிய பயிற்சி அளித்தால் போதுமானது.எஞ்சிய, 75 -– 80 சதவீதம் பேருக்கு, தொலை தொடர்பு சார்ந்த திறன் பயிற்சி தேவைப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|