பதிவு செய்த நாள்
19 மார்2017
03:49

புதுடில்லி:ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா, மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை யில் ஈடுபட்டு வருகிறது. மாருதி நிறுவனத்தின், பிரீமியம் மாடல் கார்களுக்கு, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இதையடுத்து, மாருதியை போல், பிரீமியம் மாடல் கார்களின் விற்பனையை அதிகரிக்க, ஹோண்டா முடிவு செய்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு இணை அதிகாரி நொரியாகி அபே கூறியதாவது:நிறுவனத்தின், ‘அமேஸ், மொபிலோ, பி.ஆர்வி’ ஆகிய மாடல் கார்கள், வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 2016ல், ஆசிய மற்றும் ஓசியானா நாடுகளில், ஹோண்டா, ஏழு லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. அதில், இந்தியாவில் மட்டும், 1.50 லட்சம் கார்கள்விற்பனையாகி உள்ளன. தற்போது, பிரீமிய மாடல் கார்களுக்கு அதிக தேவை காணப்படுகிறது. எனவே, அந்த வகை கார்கள் உற்பத்தியில், அதிக கவனம் செலுத்த திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|